தெருநாய்களின் தொல்லை அதிகரிப்பால் பொதுமக்கள் வேதனை

தெருநாய்களின் தொல்லை அதிகரிப்பால் பொதுமக்கள் வேதனை
X
பள்ளிப்பாளையம் பகுதிகளில், நாய்கள் கடித்து ஆடுகள் இறந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

தெருநாய்களின் தொல்லை அதிகரிப்பால் பொதுமக்கள் வேதனை

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட 15 பஞ்சாயத்து பகுதிகளில், தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் நிலை தொடர்ந்து காணப்படுகிறது. சாலையில் நடந்து செல்லும் மக்கள் மற்றும் சிறுவர்கள், நாய்களின் துரத்தலால் அச்சமடைந்து வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளை பின் தொடர்ந்து துரத்தும் இந்த நாய்கள், விபத்துக்கு காரணமாகவும் மாறுகின்றன.

தெருநாய்கள் கடித்ததில் ஆடுகள் இறக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இது குறித்து, மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்களில், பலர் புகார் அளித்து வருகின்றனர்.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த, தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் வலியுறுத்தல். அதேபோல், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் காலந்தோறும் தேவையான தடுப்பூசிகளை செலுத்தியுள்ளனவா என்பது குறித்து கண்காணிப்பு மேற்கொள்ள பள்ளிப்பாளையம் யூனியன் அதிகாரிகள் உறுதியுடன் செயல்பட வேண்டும் எனக் கூறப்படுகிறது.

Tags

Next Story