கறிக்கோழி விலை சரிவு

கொள்முதல் விலை மீறல் – கோழிப்பண்ணையாளர்கள் தீவிர நஷ்டத்தில்
நாமக்கல்: தமிழகத்தில் கறிக்கோழி கொள்முதல் விலையைவிட மிகக் குறைவாக வியாபாரிகள் வாங்குவதால், கோழிப் பண்ணையாளர்கள் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறார்கள் என்று தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கவலையுடன் தெரிவித்தார்.
பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சுமார் 25,000 பண்ணைகள் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கோழிகளுக்கான கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு (PCC) வழியாக தினசரி நிர்ணயம் செய்யப்படுகிறது.
மார்ச் 1ஆம் தேதி ஒரு கிலோக்கு ₹84 என விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், மார்ச் 31ஆம் தேதிக்கு அது ₹118 ஆக உயர்ந்தது. பின்னர், ஏப்ரல் 3ல் ₹102, ஏப்ரல் 5ல் ₹94, ஏப்ரல் 6ல் ₹96 என விலை சரிவு காணப்பட்டது. நேற்று விலை மேலும் குறைந்து ₹89 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் ₹20 முதல் ₹25 வரை குறைவாக கொள்முதல் செய்து வருவதாக வாங்கிலி சுப்ரமணியம் குற்றம்சாட்டினார். நிஜமாக கொள்முதல் விலையிலேயே வியாபாரம் நடந்தால், பண்ணையாளர்களுக்கு ஒரு நிலையான வருமானம் கிடைக்கும். ஆனால் தற்போதைய சூழலில் அவர்கள் தொடர்ந்து நட்டத்தில் தள்ளப்படுகிறார்கள் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu