1 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை,வாலிபர் கைது

1 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை,வாலிபர் கைது
X
ஒரு வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஒரிசாவை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்

1 வயது குழந்தைக்கு 'தொல்லை',ஒடிசா வாலிபருக்கு கால் முறிவு

பள்ளிப்பாளையம் அருகே உள்ள முனியப்பன் நகர் பகுதியில் வசித்து வரும் ஒடிசாவைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இவருடன் அதே ஒடிசாவைச் சேர்ந்த சம்மர்தாஸ் (33) என்ற வாலிபரும் ஒன்றாக வசித்து, இருவரும் நவீன விசைத்தறி ஆலையில் வேலை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர், சம்மர்தாஸ் அந்தப் பெண்ணின் ஒரு வயது பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே சென்றார். சிறிது நேரத்திற்குப் பின் குழந்தையுடன் வீடு திரும்பியபோது, குழந்தையின் கை, கால் பகுதிகளில் இரத்தக் காயங்கள் காணப்பட்டன.

அதிர்ச்சியடைந்த தாய், குழந்தையை உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். மருத்துவர்களின் பரிசோதனையில், குழந்தைக்குப் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருச்செங்கோடு துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்மர்தாசைக் கைது செய்து, நேற்று மாலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, தப்பி ஓட முயன்ற சம்மர்தாஸ் தவறி விழுந்து கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டது.

காயமடைந்த சம்மர்தாசை போலீசார் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.

Tags

Next Story