கோவில் திருவிழாவில் மோதல் - போலீசார் பாதுகாப்பு

கோவில் திருவிழாவில் மோதல் - போலீசார் பாதுகாப்பு
X
மாரியம்மன் கோவிலில், இரு சமூக பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

கோவில் திருவிழாவில் மோதல் - போலீசார் பாதுகாப்பு

நாமக்கல் அருகே வீசாணத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் நடைபெறும் வருடாந்த திருவிழாவில், சமூக இடைவெளிக்காரணமாக இரு பிரிவினருக்கு இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் விழாவிலும் வழிபாட்டிலும் பங்கேற்க அனுமதி கோரியதையடுத்து, மற்றொரு பிரிவு அதனை எதிர்த்தது. இதையடுத்து விழா கம்பம் பிடுங்கி கிணற்றில் வீசப்பட்டதால் விழா நிறுத்தப்பட்டது. போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். சமாதானம் ஏற்படுத்த, நாமக்கல் ஆர்.டி.ஓ. சாந்தி தலைமையில் நடத்திய பேச்சுவார்த்தையில், கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால்அனைத்து சமுதாய மக்களுக்கும் வழிபட உரிமை உள்ளது; எனவே, பட்டியலின மக்களையும் அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் மற்றொரு பிரிவினர் அதனை ஏற்க மறுத்தனர். இதனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. பின்னர், பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் வழிபாடு செய்தனர். அப்போது சிலர் போலீசை வெளியேற கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story