மே தின விழாவை முன்னிட்டு நாமக்கலில் மதுபான விற்பனைக்கு தடை

மே தின விழாவை முன்னிட்டு நாமக்கலில் மதுபான விற்பனைக்கு தடை
X
மே 1 ஆம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது

நாமக்கல்:

மே தினத்தையொட்டி, வரும் மே 1 ஆம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்திய தயாரிப்பு மற்றும் அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் அனைத்து கடைகளும், அன்றைய தினம் விற்பனை செய்யக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி, எந்த வகையிலான விற்பனையையோ அல்லது கடை திறப்பையோ மேற்கொண்டால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மே தினத்தை முன்னிட்டு சமூக அமைதி, பொது நலன் மற்றும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, உத்தரவைப் பின்பற்றுகிறார்களா என்பதை பரிசோதிக்க உள்ளனர்.

Tags

Next Story