ஆவத்திபாளையம் சாய ஆலைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

ஆவத்திபாளையம் சாய ஆலைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
X
சாய ஆலையில், மோட்டர் மூலம் சாயக்கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக வந்த புகாரின் பெயரில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்

ஆவத்திபாளையம் சாய ஆலைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

பள்ளிப்பாளையம் அருகே ஆவத்திபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு சாய ஆலையில், கழிவுநீர் சட்டவிரோதமாக வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்ட சாயக்கழிவுநீர் மோட்டர் மூலம் வெளியேற்றப்பட்ட வீடியோ ஒன்று அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மூலம் பதிவு செய்யப்பட்டு, வாட்ஸ்அப்பில் மற்றும் பிற சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சிறப்பு சோதனையில் இறங்கினர். அவர்கள், ஆவத்திபாளையம், களியனூர், சில்லாங்காடு ஆகிய பகுதிகளில் செயல்படும் சாய ஆலைகளில் நேரில் ஆய்வு செய்தனர். மேலும், சாயக்கழிவுநீர் செல்கின்ற ஓடைகள் மற்றும் அருகிலுள்ள ஆற்றோரங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நேரடி ஆய்வுகளுக்குப் பிறகு, விதிமீறி செயல்பட்ட சாய ஆலைகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். சாய கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கும் குடிநீருக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை கருத்தில் கொண்டு, அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் வலியுறுத்தலாக இருக்கிறது.

Tags

Next Story
Similar Posts
ஏரியில் முதியவர் மர்ம மரணம்
ஜெயம்  ரவி – ஆர்த்தி விவாகரத்து - ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தியின் குற்றச்சாட்டு!
சேலத்தில் தொடரும் மழையால் வீடுகள் இடிந்து சேதம்
கால பைரவருக்கு வைகாசி மாத சிறப்பு பூஜை
மத்திய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக ஈரோட்டில் கூட்டு போராட்டம் -19 அம்ச கோரிக்கைகள் முன்வைப்பு!
இளம்பெண் குழந்தையுடன் திடீர் மாயம் - போலீசில் கணவன் புகார்
கல்லூரி கனவு நிகழ்ச்சி - மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல்
மருமகள் மாயம் - மாமியார் போலீசில் புகார்! குடும்பத்தில் பரபரப்பு!
ஈரோடு உணவகங்களில் திடீர் சோதனை - உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் கடுமையான நடவடிக்கை - பல உணவகங்களுக்கு எச்சரிக்கை!
ரயில்வே பயணிகள் கவனத்திற்கு – சாமல்பட்டியில் புதிய முன்பதிவு மையம்
கஞ்சா கடத்தலில் இருவர் கைது - வாகனங்கள் பறிமுதல்!
நீட் தேர்வில் 3 முறை தோல்வியால் மன உளைச்சல் – மாணவரின் இறுதி முடிவு
வீட்டுமனை பட்டா வழங்க கோரி விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்