குமாரபாளையத்தில் நேற்று மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது

குமாரபாளையத்தில் நேற்று மாபெரும் மாரத்தான்  போட்டி நடைபெற்றது
X
JKKN கல்லூரியின் பொன் விழாவில் மாரத்தான், வெற்றியாளர்கள் ரூ.10,000 பரிசு பெற்றனர்

குமாரபாளையத்தில் மாபெரும் மாரத்தான் போட்டி 2000 பேர் பங்கேற்பு

குமாரபாளையம்JKKN கலை அறிவியல் கல்லூரிகளின் 50 வது பொன்

விழாவை முன்னிட்டு தண்ணீர் மற்றும்ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாபெரும் மாரத்தான் போட்டி நேற்று காலை 5.30 மணிக்கு JKKN பள்ளி வளாகத்தில் நடைபெற்றது . இந்த மாரத்தான் போட்டி 10 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோமீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டிக்கு

சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நடிகர் T. ஸ்ரீகாந்த் மற்றும் JKKN கல்வி நிறுவன தலைவர்கள் துவக்கி வைத்தனர்.மேலும்

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்பபட்டு பாராட்டப்பட்டது . மேலும், பதிவு செய்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் டி-சர்ட்டுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது, நீர் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்த மாரத்தான் போட்டியில் திரளான பொதுமக்கள் பெரியவர்கள் குழந்தைகள் திறமைகளை வெளிப்படுத்தி அனைவரும் பங்கேற்றார்கள் என்று JKKN கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture