லாரி டிரைவர்கள் தர்ணா போராட்டம்

லாரி டிரைவர்கள் தர்ணா போராட்டம்
X
நாமக்கலில் தனியார் நிறுவனத்துக்கு எதிராக லாரி டிரைவர்களின் போராட்டத்தால் உரிமையாளருக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது

பழுதான லாரி சரிவர சரி செய்யாததால் உரிமையாளர் தர்ணா – நாமக்கலில் பரபரப்பு

நாமக்கல் அருகே பாப்பிநாயக்கன்பட்டியில் உள்ள கனரக வாகன சேவையகம் ஒன்றில் பழுதான லாரிகளை சரி செய்ய காலதாமதம் ஏற்பட்டதனால், கரூரைச் சேர்ந்த லாரி உரிமையாளர் செந்தமிழ்செல்வன் மற்றும் டிரைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

பல மாதங்களாக பழுது சரி செய்யப்படாமல் இருந்ததால் மற்றும் லட்சக்கணக்கில் இழப்பை சந்தித்ததால், அவர் ஆத்திரம் கொண்டு நிறுவன நுழைவாயிலில் நேற்று மதியம் தர்ணாவை தொடங்கினார். தனது நிலையை விளக்கி, சரி செய்யவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை தவிர வழியில்லை என கூறியதாகவும் தகவல்.

நிறுவனம் ஒரு வாரத்துக்குள் பழுதுகளை சரி செய்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags

Next Story