பச்சை தண்ணீர் விளக்கேற்றும் அதிசய வழிபாடு

பச்சை தண்ணீர் விளக்கேற்றும் அதிசய வழிபாடு
X
ராசிபுரத்தில் பச்சை தண்ணீரில் விளக்கு பிரகாசம் அதிசய திருவிழா

ராசிபுரம் அருகே மாரியம்மன் கோவிலில் பச்சை தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தட்டாங்குட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற பச்சை தண்ணீர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இக்கோவிலின் சிறப்பு பெயருக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், கோவில் பூசாரி அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு நடத்த ஊர் தர்மகர்த்தாவிடம் எண்ணெய் கேட்டபோது, அவர் "சாமி உண்மை என்றால் விளக்கில் தண்ணீர் ஊற்றிப் பற்ற வையுங்கள்" என்று சவால் விட்டுள்ளார். உடனே, பூசாரி குளித்துவிட்டு அதிகாலையில் கோவில் சன்னதியில் அகல் விளக்கில் பச்சை தண்ணீரை ஊற்றி, விளக்கைப் பற்ற வைத்தார். அதிசயமாக, தண்ணீரில் விளக்கு கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த அதிசய நிகழ்வால், இக்கோவில் 'பச்சை தண்ணீர் மாரியம்மன் கோவில்' என அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த வாரம் தொடங்கியது. நேற்று அதிகாலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பாரம்பரியத்தைப் பின்பற்றி விளக்கில் தண்ணீரை ஊற்றி பூசாரி விளக்கைப் பற்ற வைத்தார். எண்ணெயில் எரிவதைப் போலவே, விளக்கு பிரகாசமாக எரிந்தது.

இந்த அதிசய நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்து, பச்சை தண்ணீரில் எரியும் விளக்கின் அதிசயத்தைக் கண்டு வியந்தனர்.

Tags

Next Story