டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் ஸ்கேன் முறையில் மது விற்பனை

டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் ஸ்கேன் முறையில் மது விற்பனை
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 169 டாஸ்மாக் மதுபான கடைகளில், இன்று (மே 12) முதல் புதிய முறையில் மதுவிற்பனை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய முறைப்படி, ஒவ்வொரு மதுபாட்டிலும் 'ஸ்கேன்' செய்த பிறகே விற்பனை செய்யும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ‘ஹாலோ கிராம் ஸ்டிக்கர்’ மூலம் அடையாளப்படுத்தப்படும் ஒவ்வொரு பாட்டிலும், உற்பத்தி நிலையத்திலிருந்து கடை மற்றும் வாடிக்கையாளர் வரை முழுமையாக கண்காணிக்கப்படும்.
டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்ததாவது, இந்த ஸ்கேனிங் முறையால், மொத்த விற்பனை, மதுபான வகைகள், இருப்பு நிலை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உடனுக்குடன் டிஜிட்டல் வடிவில் டாஸ்மாக் மேலாளர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன. மேலும், ஒரே பாட்டில் ஐந்து முறை வரை ஸ்கேன் செய்யப்படுவதால், எது எங்கு சென்றது என்ற விவரங்களை தெளிவாகக் கண்காணிக்க முடிகிறது.
மதுபானங்கள் மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே ஸ்கேன் செய்து விற்கும் அனுமதி உண்டு. பணி நேரத்திற்கு முந்தையோ பிந்தையோ விற்பனை முயற்சி செய்ய முடியாது. ஸ்கேன் செய்யாமல் விற்றால், பொறுப்பே டாஸ்மாக் விற்பனையாளருக்கே!
இந்த புதிய முறை, கடைகளில் நடைபெறும் இருப்பு விவர மோசடி, கணக்கில் குழப்பம், பணமில்லா மது வெளியேற்றம் போன்ற முறைகேடுகளை கட்டுப்படுத்தும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஸ்கேன் கருவியில் நெட்வொர்க் சிக்கல் ஏற்பட்டால், பின்னர் கணக்கில் சேர்க்கும் விதமாக வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறைமையை முன்னெடுத்தது, விற்பனை கட்டுப்பாடுகளை எளிதாக்கவும், கண்காணிப்பை கடுமைப்படுத்தவும் என்பதே முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu