அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது

அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் பயிற்சி வகுப்பு ராசிபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது
ராசிபுரம்: வீ த லீடர்ஸ் அறக்கட்டளை மற்றும் சேலம் நாம் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் முறை பயிற்சி வகுப்பு ராசிபுரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு வகைகளான சிகப்பு அவல், புடலங்காய், ஊற வைத்த வேர்க்கடலை, நாட்டு சர்க்கரை கலந்து செய்யப்பட்ட லட்டு மற்றும் தேங்காய்ப்பாலில் தயாரிக்கப்பட்ட நீர்மோர் ஆகியவை வழங்கி பங்கேற்பாளர்கள் வரவேற்கப்பட்டனர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான சுகந்தி அனைவரையும் அன்புடன் வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக, சென்னையிலிருந்து சிறப்பு பயிற்சியாளராக வருகை தந்திருந்த ராஜேந்திர தானானந்தா, பஞ்ச பூத முறையில் அன்றாட உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் "உணவும் உணர்வும்" மற்றும் சரியான உணவு உண்ணும் முறைகள் குறித்தும் விளக்கியதோடு, பல்வேறு ஆரோக்கியமான உணவு வகைகளை தயாரிக்கும் செயல்முறை விளக்கங்களையும் நேரடியாக செய்து காட்டினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆடிட்டர் வெங்கட சுப்பிரமணியம் சொல்லாத சொல் மருத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரை பங்கேற்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில், நாம் அறக்கட்டளை தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் பயிற்சியாளர் மற்றும் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.
இந்த அடுப்பில்லா சமையல் முறை பயிற்சி வகுப்பு ஆரோக்கியமான உணவு முறைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியதாக பங்கேற்பாளர்கள் கருத்து தெரிவித்தனர். இது போன்ற பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu