அவசர பிரிவில் மின்தடை – அரை மணி நேர திகில் தருணம்

அவசர பிரிவில் மின்தடை – அரை மணி நேர திகில் தருணம்
நாமக்கல்: கடந்த இரவு நாமக்கல் மாவட்டத்தில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. இதன் பாதிப்பு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் சென்றடைந்தது. நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே அமைந்துள்ள இந்த மருத்துவமனையில், இரவு 7:30 மணியளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது.
அந்த நேரத்தில் ஜெனரேட்டரும் செயலிழந்ததால், அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு உள்ளிட்ட முக்கிய பிரிவுகள் முழுக்க இருளில் மூழ்கின.
விபத்து நேரத்தில் மருத்துவர்கள், தங்கள் மொபைல் போன்களின் டார்ச் உதவியுடன் நோயாளிகளை சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு மட்டுமே ஜெனரேட்டர் செயல்பட்டு, மின்சாரம் வழமையாக வழங்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையை தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் உமா நேரில் சென்று அரசு மருத்துவமனையில் மின் வசதி மற்றும் அவசர மின்சாரம் ஒழுங்கமைப்பு குறித்த ஆய்வை மேற்கொண்டார். அப்போது, எதிர்காலத்தில் இந்தவகையான கோளாறுகள் ஏற்படாமல், சீரான மின் வசதி மற்றும் பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உறுதியுடன் எச்சரிக்கை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu