வெயிலில் பழங்களை இப்படி சாப்பிடாதீர்கள் – உடல்நலம் பாதிக்கலாம்

வெயிலில் பழங்களை இப்படி சாப்பிடாதீர்கள் – உடல்நலம் பாதிக்கலாம்
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, உடலை ஜில்லென வைத்திருக்க பலர் இயற்கையான பழங்களை தேடி சாப்பிடுகிறார்கள். குறிப்பாக தர்பூசணி, வெள்ளரிக்காய், கொய்யாப்பழம் போன்றவை இக்கால வெயிலில் அதிக விருப்பத்துடன் எடுத்து கொள்ளப்படும். இந்த பழங்களை சாப்பிடும்போது பலரும் சுவைக்காக உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், இது சாலஞ்சலமற்றதா என்பதை பற்றி சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் விக்ரம் விளக்குகிறார். பருவ காலங்களில் கிடைக்கும் பழங்கள் இயற்கை நமக்கு வழங்கும் அருமையான பரிசுகள் என அவர் கூறுகிறார். இவற்றை இயல்பான நிலைமையிலேயே சாப்பிடுவதே உடலுக்கு நல்லது. சிலர் குளிர்ச்சி தரும் பழங்களை சாப்பிடும்போது ஜலதோஷம் ஏற்படலாம் என எண்ணி, உப்பு மற்றும் மிளகாய்த்தூளைச் சேர்க்கிறார்கள். சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூளை சுவைக்காக சேர்ப்பது உடலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தாது எனினும், இதை தினமும் அல்லது அடிக்கடி செய்யும் பழக்கமாக வைத்துக்கொண்டால், அல்சர் ஏற்படும் அபாயம் உள்ளது. அதோடு, இது உடலில் கபத் தன்மையை அதிகரிக்கும் என்பதால், உணவு பழக்கங்களில் இந்த வழக்கத்தை சீராக பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்துகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu