ஆதித்தமிழர் உரிமைக்காக திருச்செங்கோட்டில் தீர்மானக் கூட்டம்

ஆதித்தமிழர் உரிமைக்காக திருச்செங்கோட்டில் தீர்மானக் கூட்டம்
திருச்செங்கோடு: ஆதித்தமிழர் பேரவையின் மேற்கு மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சரவணகுமார் தலைமை வகிக்க, பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் முக்கிய உரையாற்றினார். இதில் மாவட்ட தலைவர் வேங்கை மார்பன், மாநில தொண்டரணி செயலாளர் தமிழரசு, திருச்செங்கோடு நகர செயலாளர் முத்துசாமி மற்றும் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தன் உரையில் நிறுவன தலைவர் அதியமான் கூறியதாவது: “தமிழக சட்டசபையில் உள்ள 234 தொகுதிகளில், ஆதிதிராவிடர்களுக்கு 29 தொகுதிகள், தேவேந்திர குல வேளாளர்களுக்கு 14, அருந்ததியர்களுக்கு வெறும் 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இது ஒரு சமநிலையற்ற ஒதுக்கீடாகும். இந்நிலையை மாற்ற தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.
மேலும், தி.மு.க. கூட்டணியில் தற்போது ஆதித்தமிழர் பேரவைக்கு மூன்று இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் தேர்தலில் மேலும் அதிக இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu