திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் சாதனையாளர் தின விழா

திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் சாதனையாளர் தின விழா
X
பல துறைகளில் சிறந்து விளங்கிய 1,621 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, சாதனையாளர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் சாதனையாளர் தின விழா

திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் சாதனையாளர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் சேர்மன் கருணாநிதி தலைமை வகிக்க, நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். இணை நிர்வாக இயக்குனர் அர்த்தநாரீஸ்வரன், இணை செயலாளர் ஸ்ரீராகாநிதி அர்த்தநாரீஸ்வரன், துணைத்தலைவர் கிருபாநிதி ஆகியோர் நிகழ்வுக்கு முன்னிலை வகித்தனர்.

வேலைவாய்ப்பு நிர்வாகி சரவணன், வருடாந்திர வேலைவாய்ப்பு அறிக்கைகளை வெளியிட்டார். விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உதயசங்கர், பல துறைகளில் சிறந்து விளங்கிய 1,621 மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசும் போது, நெட்வொர்க்கிங் திறன், வலுவான மற்றும் பணிவான குணம், கூட்டுத்திறன் மற்றும் நேர மேலாண்மை திறன்கள், கார்ப்பரேட் உலகில் வெற்றி பெற முக்கியமானவை என்று அவர் மாணவர்களுக்கு விளக்கினார்.

மேலும், கல்லூரி செயல் இயக்குனர் குப்புசாமி, முதன்மை செயல் அலுவலர் சொக்கலிங்கம், ஆராய்ச்சி இயக்குனர் பாலகுருநாதன், செயல் அலுவலர் ராஜேந்திரன், திறன் மேம்பாட்டு இயக்குனர் குமரவேல், சேர்க்கை இயக்குனர் சவுண்டப்பன் உள்ளிட்டோர் மற்றும் பல துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture