ராசிபுரம் ஞானமணி கல்லூரியில் பட்டமளிப்பு சிறப்பு விழா

ராசிபுரம் ஞானமணி கல்லூரியில் பட்டமளிப்பு சிறப்பு விழா
X
ஞானமணி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 750 மாணவர்கள் பட்டம் பெற்றனர்

ஞானமணி கல்லூரியில் பட்டமளிப்பு சிறப்பு விழா

ராசிபுரம் ஞானமணி கல்வி நிறுவனங்களில் 14வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை கல்வி நிறுவன தலைவர் அரங்கண்ணல் துவக்கி வைத்தார். நிகழ்வில் முதல்வர் கண்ணன் மற்றும் டீன் ஆரோக்கியசாமி விழா அறிக்கையை சமர்ப்பித்தனர். தாளாளர் மாலாலீனா, துணை தாளாளர் மதுவந்தினி அரங்கண்ணல், முதன்மை நிர்வாக அதிகாரி பிரேம்குமார் மற்றும் கல்வி இயக்குனர் சஞ்செய் காந்தி ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சேஷ்சாயி, பட்டம் வழங்கியதோடு மாணவர்களை ஊக்கப்படுத்தியும் பேசினார். அவர் தனது உரையில்,மதிப்பெண்கள் மட்டும் ஒருவரின் திறனை நிரூபிக்காது. அறிவை வளர்த்துக் கொள்வதும், தெளிவான முடிவுகளை எடுக்கக் கற்றுக் கொள்வதும் அவசியம். எதிர்காலத்தை பயமாகச் சிந்திக்காமல், தைரியமாக எதிர்கொள்வது முக்கியம். பெற்றோர் கூறும் அறிவுரைகளை பெருமையுடன் ஏற்று, கவனம் சிதறாமல் நாடு, வீடு, சமூகம் மற்றும் தன்விழிப்பிற்காக செயல்பட வேண்டும், என கூறினார்.

இந்த விழாவில், பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்ற 750 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில், 103 மாணவர்கள் முதுகலை பட்டமும், 647 பேர் இளநிலை பட்டமும் பெற்றனர். விழா ஒட்டுமொத்தமாக உற்சாகமும் பெருமிதத்துடனும் நடைபெற்றது.

Tags

Next Story