ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் - திமுக கருத்து

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் - திமுக கருத்து
X

கனிமொழி 

ஆக்சிசன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது.

இக்கூட்டத்தில் திமுக சார்பில் கலந்து கொண்ட கனிமொழி எம்பி, ஆக்சிசன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என கூறினார்.

மேலும் பேசிய அவர் ஆக்சிசன் உற்பத்திக்கு தவிர மற்ற செயல்பாடுகளுக்கு மின்சாரம் வழங்கக் கூடாது என்றும் மத்திய மாநில குழு அமைத்து ஆலையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
AI மூலம் புகைப்படங்களில் அதிரடியான மாற்றங்கள் செய்யும் Editing AI Tools!