வாட்ஸ் அப் குரூப் காலில் இனி 32 பேருடன் பேசலாம்

வாட்ஸ் அப் குரூப் காலில் இனி 32 பேருடன் பேசலாம்
X
ஒரே நேரத்தில் வாட்ஸ் அப்பில் 32 பேருடன் வாய்ஸ் காலில் பேசும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் என்ற செயலி இல்லாத ஸ்மார்ட்போனும் இல்லை, அதனை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை. வீடியோ, புகைப்படங்கள் பகிர்தல், சேட்டிங், குரூப் சேட்டிங், குரூப் காலிங், வீடியோ மற்றும் ஆடியோ கால், பணம் அனுப்பும் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வாட்ஸ் அப்பில் உள்ளது.

இந்நிலையில் ஒரே நேரத்தில் வாட்ஸ் அப்பில் 32 பேருடன் வாய்ஸ் காலில் பேசும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் வீடியோ காலில் 4 பேருடன் மட்டுமே பேசமுடியும், அதன்பின் அந்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. அது இப்போது 32 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி வாட்ஸ் அப்பில் பயனர்கள், இனி 2ஜிபி வரை ஃபைல் ஷேரிங் செய்து கொள்ள முடியும்,

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!