5G வந்தால் நமக்கு என்ன பயன்? இதைப்படிங்க... எல்லாமே புரியும்

5G வந்தால் நமக்கு என்ன பயன்? இதைப்படிங்க... எல்லாமே புரியும்
X
தகவல் தொழில்நுட்பத் துறையில் '5ஜி' வந்தால் நாம் என்னென்ன பயனை பெறலாம் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

தகவல் தொழில்நுட்ப சேவையில் '5ஜி' என்பது 5ம் தலைமுறை சேவை (5th Generation) என்பதாகும். இது தற்போது இருக்கும் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகத்தைவிட கூடுதலாக அதிவேகத்துடன் எல்லா வேலைகளையும் செய்ய முடியும்.

இந்த சேவையில் அதிகப்படியான ரேடியோ அலைவரிசை பயன்படுத்தப்படுவதால் ஒரே சமயத்தில் ஏராளமான மொபைல் சாதனங்களை இணையத்தில் இணைத்து பயன்படுத்த முடியும்.

இந்த '5ஜி' சேவை நடைமுறைக்கு வந்தால், நேரடியாக காணும் பொருள்களுக்கு வரைபடம், ஒலி உள்ளிட்டவற்றை முப்பரிமாணத்தில், நிகழும் நேரத்திலேயே இணைத்துக் காட்டும் இணைப்பு நிஜமாக்கம் (Augmented Reality), கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை நேரில் இருக்கும் உண்மையான உருவம் போலவே காட்டும் மெய்நிகர் உண்மை (Virtual reality) போன்றவற்றை பயனர்கள் அனுபவிக்க முடியும்.

மேலும் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள டிரைவர் அல்லாத கார்களை இயக்க இந்த 5ஜி சேவை உதவுகிறது. இதன் மூலம் தகவல்களை பறிமாறிக்கொள்ளலாம்.

தற்போதுள்ள 4ஜி எனப்படும் 4ம் தலைைமுறை சேவையில் வேகம் சராசரியாக 42 Mbps ஆக உள்ளது. ஆனால் 5ஜி தொழில்நுட்பத்தால் 1 Gbps வேகத்தை தொடலாம் என தொலைத் தொடர்புத் துறையினர் தெரிவிக்கின்றனர். அதாவது இணைய வேகம் தற்போது உள்ளதைவிட சுமார் 20 மடங்கு அதிகமாக இருக்கும். ஒரு HD திரைப்படத்தை ஒரே நிமிடத்தில் பதிவிறக்கம் செய்துவிடலாம்.

Tags

Next Story