Upi Pin Means in Tamil-UPI என்பதன் அர்த்தம் என்ன? எப்படி பயனாகிறது?
Upi Pin Means in Tamil-UPI pin எப்படி செயல்படுகிறது.(கோப்பு படம்)
Upi Pin Means in Tamil
ஒரு காலத்தில் தூரமாக அல்லது வேறு மாவட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் பணம் அனுப்புவதற்கு அஞ்சல் துறையில் மணி ஆர்டர் என்ற பணம் அனுப்பும் திட்டம் இருந்தது. தங்கள் மகன் படிக்கும் கல்லூரி முகவரிக்கு குறிப்பிட்டது தொகையை அஞ்சல் துறை மணி ஆர்டர் மூலமாக அனுப்புவார்கள். அது போய்ச் சேர குறைந்தது 3 நாட்கள் ஆகும்.
Upi Pin Means in Tamil
அதற்காகவே மாணவர்கள் அப்பகுதி போஸ்ட்மேன் உடன் நல்ல நட்பாக பழகுவார்கள். அவர்களும் மாணவர்களுடன் நட்பாகவே இருப்பார்கள். ஆமாம், பணம் பெற்றதும் அவர்களுக்கும் கை செலவுக்கு பணம் கிடைக்கும் அல்லவா? அதற்காகவே போஸ்ட்மேன் (அப்போது அதிகபட்ச பண மதிப்பு ரூ.100 மட்டுமே) நூறு ரூபாய் தாள்களாக கொண்டுவராமல் ஐந்து பத்து என நோட்டுகளும் கொண்டுவருவார். அப்புறம் அவருக்கு கொடுக்கவேண்டிய பணத்துக்கு 'சில்லறை இல்லைண்ணே. நாலைக்குத் தாரேன்' என்று சொல்லிவிடக்கூடாதல்லவா?
இப்படி பணப்பரிமாற்றம் நடந்த காலத்தில் இன்றைய ஒரு நொடி பணப்பரிமாற்றம் நடக்கும் என்று கற்பனை செய்து பார்த்திருப்போமா?
மாற்றம் ஒன்றே மாறாதது என்று தமிழில் நடைமுறை வழக்கு ஒன்று உண்டு. உலகம் தோன்றியது முதல் மாறாதது மாற்றம் ஒன்றுதான் என்றாலும் மாற்றத்தை ஏற்காவிட்டாலும் கூட அதுவும் மாறாததாகவே இருந்து வந்திருக்கிறது. ஆமாம் காலப்போக்கில் மாற்றத்திற்குள் தங்களை அறியாமல் பொருந்திப்போவார்கள்.
Upi Pin Means in Tamil
ஆனால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விஞ்ஞான வளர்ச்சியில் சில மாற்றங்களை மனிதன் ஏற்றாக வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அதில் நன்மை தீமைகள் இருந்தாலும். ஆனால் நன்மைகள் அதிகமாகவே இருக்கும். இந்த அறிவியல் வளர்ச்சியில் வங்கித்துறையும் தொழில்நுட்ப வளர்ச்சியும் எந்தவிதத்திலும் குறைந்துவிடவில்லை.
வங்கித் துறை பரிவர்த்தனைகள்
வங்கி பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்வதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு படிதான் UPI ஆகும். அதாவது, ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (Unified Payments Interface). UPI இந்த வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம்.
Upi Pin Means in Tamil
ஆனால் அது என்ன, எப்படிச் செயல்படுகிறது என்பதை முழுமையாக நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எந்த ஒரு மாற்றத்தையும் புரிந்து செய்யும்போது அதை ஏற்றுக்கொள்ளத் தயாராவது எளிது என்பதற்கேற்ப இங்கு UPI பேமெண்ட்டுகளில் என்ன நடக்கிறது என்பதை அலசுவோம்.
UPI என்றால் என்ன?
ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) என்பது இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலமாக (National Payment Corporation of India) உருவாக்கப்பட்டுள்ள ஒரு கட்டண முறையாகும். இது இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இடையில் உடனடியாகப் பணப் பரிவர்த்தனை செய்துகொள்ள அனுமதிக்கிறது. UPI ஆனது ஏற்கனவே உள்ள IMPS உள்கட்டமைப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை 24 மணி நேரமும் உடனடியாகப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.
Upi Pin Means in Tamil
NPCI என்றால் என்ன?
இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் (NPCI) என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவை மூலமாக சேவையாற்றும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும். இது இந்தியாவில் சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துகிறது.
UPI எவ்வாறு வேலை செய்கிறது?
UPI ஆனது வங்கி கணக்கின் விவரங்களை நிரப்ப வேண்டிய அவசியமின்றி, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் வாடிக்கையாளரின் மெய்நிகர் முகவரி (mail id) மூலம் ஒரு ஸ்மார்ட்போனில் பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ அனுமதிக்கிறது. இதில் பரிவர்த்தனை உங்களின் குளோபல் அட்ரஸ் (உங்களின் கைப்பேசி எண் அல்லது ஆதார் எண்) மற்றும் லோக்கல் அட்ரஸ் (மெய்நிகர் முகவரி) அடிப்படையில் நடக்கிறது.
Upi Pin Means in Tamil
மெய்நிகர் முகவரி
உங்கள் மெய்நிகர் முகவரி என்பது ஒரு மின்னஞ்சல் முகவரியை ஒத்தது. உதாரணமாக xyz@sbi இதில் xyz என்பது பயனாளியின் பெயர் மற்றும் SBI உங்கள் வங்கியாக இருக்கும். மெய்நிகர் முகவரி உங்கள் வங்கிக் கணக்கின் எண்ணைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலான சிறந்த மாற்றுகளாகும். நீங்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் மெய்நிகர் முகவரிகளை உருவாக்கலாம்.
மேலும் இது மிகவும் பாதுகாப்பானது. UPI ல் இரண்டடுக்குப் பாதுகாப்பு முறை (2FA) பயன்படுத்தப்படுகிறது. அதாவது நீங்கள் ஓர் ATM ல் பணம் எடுக்கிறபோது உங்கள் ATM கார்டு முதல் காரணியாகவும் உங்களின் பாஸ்வேர்ட் இரண்டாவது காரணியாகவும் கொள்ளப்படுகிறது. அதே போல இதில் NCPI ஆப் BHIM மூலம் UPI குறியீடும் வங்கிகள் மூலம் MPIN குறியீடும் தரப்படுகிறது.
UPI-PIN மற்றும் M-PIN இடையே உள்ள வேறுபாடு என்ன?
UPI- PIN என்பது 4-6 இலக்க குறியீடாக உள்ளது, இது BHIM பயன்பாட்டில் முதல் முறையாக நீங்கள் பதிவு செய்யும்போது உருவாக்கப்பட்டதாகும். UPI பரிமாற்றங்களை அங்கீகரிப்பதற்கு இந்தக் குறியீட்டை நீங்கள் பயன்படுத்தலாம். MPIN என்பதோ வங்கிகளால் தங்களது கைப்பேசி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது.இவை இரண்டில் உங்களது தேவை மற்றும் பயன்படுத்தும் ஊடகத்திற்கு ஏற்ப இரண்டையும் பயன்படுத்தலாம்.
Upi Pin Means in Tamil
BHIM என்பது என்ன?
BHIM (Bharat Interface forMoney) UPI அல்லது சாதாரணக் கணக்குகளுக்குப் பரிவர்த்தனை செய்ய உதவுவது. பேலன்ஸ் மற்றும் ஏனைய தகவல்களுக்கும் இது பயன்படுகிறது. IMPS-ஐ வங்கி எண் குறிப்பிடும் நேரத்தையும் விட இது விரைவானது. அதிகபட்ச பரிவர்த்தனை வரையறை: தற்சமயம் அதிகபட்ச பரிவர்த்தனை வரையறை ஒரு லட்சமாக உள்ளது.
Upi Pin Means in Tamil
இந்த பணப்பரிமாற்ற முறை வருவதற்கு முன்பு கூட யாருக்கேனும் பணம் அனுப்ப வேண்டும் என்றால் அவர்களது வங்கிக்கணக்கை வாங்கி அதுவும் அவர்களுக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ, அதே வங்கியின் கிளை உள்ள இடத்துக்குச் சென்று பணம் அனுப்பி வந்தோம். ஆனால், இன்று நடுநிசியில் ஒருவருக்கு பணம் தேவை என்றாலும் உடனே அனுப்பி விடலாம். இது அறிவியல் வளர்ச்சியில் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu