Unavoidable Technologies-தவிர்க்க முடியாத தகவல் தொழில்நுட்பம், வரமா? சாபமா?

Unavoidable Technologies-தவிர்க்க முடியாத தகவல் தொழில்நுட்பம், வரமா? சாபமா?
X

unavoidable technologies-செல்போன் பயன்படுத்தும் மாணவர்கள்(கோப்பு படம்)

தகவல் தொழில்நுட்பத்தை தவிர்க்கவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

Unavoidable Technologies, Cellphone Usage, Education System, Government of India

குழந்தைகள் மொபைல் போனை எடுத்தாலே அவர்களை அதட்டி மிரட்டி பிடுங்கிய நாம், இன்று அவர்களுக்கு தனியாக 5 ஜி மொபைல் போன் வாங்கி கொடுக்கும் அளவுக்கு சூழல் உருவாகி அத்தனை பெற்றோர்களையும் கட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக கொரோனா பேரிடரிலும் பல தனியார் கல்வி நிறுவனங்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஆன்லைன் கல்வியை அறிமுகம் செய்தன.

இதன் விபரீதத்தை உணர்ந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா பேரிடர் காலம் முடிவுக்கு வரும் வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து அடுத்த ஆண்டு படித்துக் கொள்ளலாம் என அறிவித்து விட்டார். பிலிப்பைன்ஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளும் கல்வி நிறுவனங்களை கொரோனா தடுப்பூசி வரும் வரை திறப்பதில்லை என்ற தெளிவான முடிவுகளை எடுத்தன.

Unavoidable Technologies

இந்திய அரசியலில் குறிப்பாக தமிழக அரசியலில் இதெல்லாம் சாத்தியமில்லை தான். தனியார் கல்வி நி றுவனங்கள் எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்பதற்கு கொண்டு வந்த ஆன் லைன் கல்வியை கடும் எதிர்ப்புகளுக்கு இடையே அரசும் அமல்படுத்தியது தான் கொடுமையிலும் கொடுமை.

அலைபேசியை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து விட்டு பெற்றோர்கள் மனஉலைச்சலில் தவிப்பது சொல்லி மாளாது. குறிப்பாக பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள், கல்லுாரி பருவத்தில் ஆண், பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்களின் நிலை மிகவும் மோசம். பல கல்வி நிறுவனங்கள் பல மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்துகின்றன. இதனால் கண்ணுக்கும், உடலுக்கும், மனதுக்கும் பெரும் கேடு விளைகிறது.


தவிர குழந்தைகள் படிக்கிறார்களா? விளையாடுகிறார்களா? வேறு யாருடனும் பேசுகிறார்களா? அல்லது போனில் வேறு ஏதாவது படம் பார்க்கிறார்களா? என தமிழகத்தில் எந்த பெற்றோராலும் கண்காணிக்க முடியவில்லை. கல்லுாரி மாணவிகள் தங்களது பாய் பிரண்டுகளுடன் தொடர்பு கொள்ள மொபைல் போன் மிகவும் எளிய வழிமுறைகளை உருவாக்கி கொடுத்து விட்டது. இதனால் ஒரு தலைமுறையே தற்போது திண்டாடுகிறது.

தவிர சமூகத்திலும் இந்த மொபைல் பெரும் பிரச்னைகளை கிளப்பி வருகிறது. பல குடும்பத்தலைவிகள் பல்வேறு கயவர்களிடம் ஏமாறுவதும், கள்ளக்காதலில் சிக்குவதும், டிக்டாக்கில் சீரழிவதும் தெடர்கதையாகி வருகிறது. தமிழகத்தில் தினந்தோறும் பல கொலைகள், கற்பழிப்புகள், குடும்ப சீரழிவுகள் நடைபெற இந்த அலைபேசி முக்கிய காரணம் ஆகி உள்ளது.

Unavoidable Technologies

இந்நிலையில் புதிதாக வந்துள்ள ஏஐ தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என பாரத பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாட்டு உலக தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அந்த அளவு ஏஐ தொழில்நுட்பத்தில் ஆபத்துக்கள் உள்ளன. இதனை சரி செய்ய இப்போதே நாம் உஷாராக வேண்டும் என்று பாரத பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்து இருக்கிறார்.

அப்படியானால் அந்த தொழில்நுட்பம் எந்த அளவு ஆபத்தானது என்பதை கண்டுகொள்ள வேண்டும். இந்த தகவல் தொழில்நுட்பம் ஒரு கைப்பிடி இல்லாத கத்தி. இதனை கையாள்வது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம் ஆகும். பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பது மட்டுமே போதாது.

Unavoidable Technologies

மத்திய அரசு தகவல் தொழில்நுட்பத்தில் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்து தகவல் தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே, இந்த கை பிடியில்லாத கத்தியை மிகவும் சாதுர்யமாக ஆரோக்கிய பாதைகளுக்கு பயன்படுத்த முடியும்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா