இளமை காலத்துக்கு நாம் பயணிக்க முடியுமா..? தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க..!

இளமை காலத்துக்கு நாம் பயணிக்க முடியுமா..? தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க..!
X

time travel in tamil-காலப்பயணம் (கோப்பு படம்) 

காலப்பயணம் குறித்து நாம் சினிமாக்களில் பார்த்து இருக்கிறோம். ஆனால் அது சாத்தியமா என்பதை நாம் யோசித்துப் பார்த்து இருக்கிறோமா?

Time Travel in Tamil, Is It Possible Time Travel, Albert Einstein,Stephen Hawking,Nathan Rosen

காலத்தின் சாலைகளில் முன்னும் பின்னுமாக செல்லும் திறன் அறிவியல் புனைகதைகளிலும் சினிமாக்களிலும் பார்த்து ரசித்து ருப்போம். நாமும் அப்படி போகமுடிந்தால் நன்றாக இருக்குமே என்றும் ஏங்கி இருப்போம். மேலும் அப்படியான காலப்பயணம் இயற்பியலாளர்களையும் நீண்ட காலமாக கவர்ந்துள்ளது. அதற்கான ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Time Travel in Tamil

எனவே கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பயணிப்பது உண்மையில் சாத்தியமா?

டாக்டர் ஹூ என்பது காலப்பயணம் பற்றிய மிகவும் பிரபலமான கதைகளில் ஒன்றாகும். தி டைம் மெஷின் மற்றும் பேக் டு தி ஃபியூச்சர் ஆகியவற்றுடன், கடந்த காலத்தைப் பார்வையிடுவது மற்றும் எதிர்காலத்தில் பயணம் செய்வது போன்ற சோதனைகள் மற்றும் முரண்பாடுகளை இது ஆராய்ந்துள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில், டாக்டர் காலப்பயணத்தில் தொடர்கிறார். எந்த காலத்திற்கு மற்றும் எந்த இடத்திற்கும் செல்லக்கூடிய ஒரு மேம்பட்ட கைவினைப்பொருள் வழியாக பயணிக்கிறார். பிரபலமாக, டார்டிஸ் இயற்பியல் இடத்தைப் பற்றிய நமது புரிதலை மீறுகிறது. இது வெளியில் சாதாரணமாக தோன்றுவதை விட அதன் கருத்து பெரியது.

Time Travel in Tamil

காலப்பயணம் (Time Travel) சாத்தியமா? இல்லையா? என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க சமூக ஊடகங்களில் இன்று பெரிதாக பேசப்படும் தகவல்களில் ஒன்று இந்த காலப்பயணம். 2028ம் ஆண்டு Time Travel இயந்திரம் உருவாக்கப்பட்டுவிடும் என்று ரகசியம் காத்துவந்த ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தகவல் கசிந்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. காலப்பயணத்துக்கான இயந்திரம் இன்னும் நான்கே வருடங்களில் கண்டுபிடிக்கப்படுவது சாத்தியமா?

அதுகுறித்து இயற்பியல் கருத்துக்கள் என்ன கூறுகின்றன?

காலப்பயணம் மேற்கொள்வது குறித்து ஏராளமான படங்கள் வந்துவிட்டன. அந்தப்படங்களைப்பார்த்து நாமும் அப்படி செல்ல முடியாதா என்று ஏங்கி இருக்கிறோம். ஒருவேளை அப்படி கண்டுபிடிக்கப்பட்டால் என்ன நடக்கும்? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?


Time Travel in Tamil

உதாரணமாக நான் எனது பத்தொன்பதாவது வயதுக்கு செல்ல நினைத்து அந்த காலத்துக்குச் சென்ற பின்னர் மீண்டும் வராமல் அங்கேயே தங்கிவிடலாம்.அப்படி எல்லோரும் நினைத்தால் உலகில் என்ன நடக்கும்? பொதுவாகவே எல்லோருமே இளமை காலத்துக்குச் செல்லவே விரும்புவார்கள்.

ஒருவேளை நான் பத்தொன்பதாவது வயதுக்குச் சென்றுவிட்டால் எனது குழந்தைகள் என்ன ஆவார்கள்? இப்படி விடை கிடைக்காத ஏராளமான கேள்விகள் உள்ளன. காலப்பயணத்துக்கான இயந்திரம் சாத்தியமா இல்லையா என்பதற்கே விடை தெரியாத நிலை நீடித்தாலும் எல்லோருக்குமே காலப்பயண இயந்திரம் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

Time Travel in Tamil

இதில் நாம் சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம் காலாப்பயணத்தால் காலத்தை கடக்க முடியுமே தவிர, ஒரு விஷயத்தை மாற்றமுடியுமா என்பதும் தெரியாமல் உள்ளது. நான் பத்தொன்பதாவது வயதுக்கு செல்ல நினைத்தால் எனது உருவம் இப்போது உள்ளதுபோலவே தான் இருக்கும். காலத்தை மட்டுமே கடக்கமுடியும். ஒன்றை மாற்றிவிடமுடியாது.

இருப்பினும் அந்த மாய கால இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டால், இது போன்ற பல கேள்விகளுக்கு விடைகள் கிடைத்துவிடும்.

காலப்பயணம் சாத்தியமா?

ஒளி ஒரு விநாடிக்கு தோராயமாக 3 லட்சம் கி.மீ வேகத்தில் வரை பயணிக்கிறது. ஒளியின் வேகத்தில் மனிதர்கள் பயணித்தால் அதன் விளைவுகளை எண்ணிப்பாருங்கள். இவ்வளவு சிக்கல்கள் நீடித்தாலும் கால பயணத்துக்கான ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளத் தொடங்கினார்கள். இப்படியான ஆய்வுகளில் ஒளியின் வேகத்தில் சென்றால் காலப்பயணம் சாத்தியம் என்று ஆய்வுகள் நம்பிக்கை தெரிவித்திருந்ததால் பலரும் அதற்கு முயற்சித்துப்பார்த்தனர். ஆனால் எவ்வளவு முயற்சி எடுத்தபோதும் ஒரு குறிப்பிட்ட வேகத்தைக்கடந்து மனிதர்களால் பயணிக்கமுடியவில்லை.

Time Travel in Tamil

ஐன்ஸ்டீன் என்ன சொன்னார்?

ஏனய்யா முடியாது..? என்று மண்டையைக்குடைந்து யோசித்துக்கொண்டிருந்வேளையில் , ஐன்ஸ்டீன் ஒரு விளக்கமளித்தார். "நீங்க எவ்வளவுதான் முயன்றாலும் ஒளியின் வேகத்தில் மனிதர்கள் பயணிக்க முடியாது" என்று கூறினார். அதற்கான விளக்கத்தையும் அவரே உதாரணத்துடன் தெளிவு படுத்தினார். 10 கிமீ வேகத்தில் வரும் ஒரு ரயில் நின்றுக்கொண்டிருக்கும் மற்றொரு ரயில் மீது மோதினால் பாதிப்பு எப்படி இருக்கும்?

குறைவான பாதிப்பை உருவாகும். ஆனால் அதே ரயில் 100 கிமீ வேகத்தில் வந்து மோதினால் என்ன நடக்கும்? மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். இதற்கு காரணம் ரயிலின் வேகம் என்று நினைத்தால் அதுதான் தவறு.நிகழ்ந்த பாதிப்புக்குக்காரணம் ரயிலின் எடைதான் என்று ஐன்ஸ்டீன் கூறினார். ஒரு பொருள் எவ்வளவு வேகத்தில் போகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அதன் எடையும் அதிகரிக்கிறது.எனவேதான் பாதிப்பும் அதிகமாகிறது என்று விளக்கமும் அளித்தார்.

Time Travel in Tamil

எடை அதிகமான ஒரு பொருளை தூக்குவதற்கோ அல்லது நகர்த்துவதற்கோ அதிக ஆற்றல் தேவை. ஆயிற்றால் கூடுதலாக கிடைக்கும்போது நம்மால் கூடுதல் எடையுள்ள ஒரு பொருளை நகர்த்த முடிகிறது.

ரயிலில் எவ்வளவு அதிகமான பெட்டிகளைச் சேர்த்து ரயிலின் வேகத்தை கூட்டினாலும், கூடுதலாக சேர்க்கப்பட்ட பெட்டியின் எடை இந்த வேகத்தை குறைத்துவிடும். எனவே நம்மால் ஒளியின் வேகத்திற்கு போவது என்பது சாத்தியமானது அல்ல என்று விளக்கினார். அதை விளக்கும் ஃபார்முலாதான் E=mc2.

வாம்ஹோல்

அந்த காலகட்டத்தில் ஐன்ஸ்டீன் ஒரு விஷயத்தை மீண்டும் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்தது 'வாம்ஹோல்' (wormholes). 1935 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் நாதன் ரோசன் ஆகியோர் சேர்ந்து இதனை கோட்பாட்டு ரீதியாக கண்டுபிடித்தனர். இவர் கண்டுபிடித்த இந்த வாம்ஹோல் வழியாக காலப்பயணம் சாத்தியம் என்று கூறப்பட்டது. ஒளி, ஒளியின் வேகம், காலப்பயணம் , வாம்ஹோல் என அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.

Time Travel in Tamil

ஆனால், முழுமையாக காலப் பயணத்துக்கான இயந்திரம் இன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.

காலப்பயணம் குறித்து ஸ்டீபன் ஹாக்கிங் சில விஷயங்களை கண்டுபிடித்தார். அதாவது ஒளியின் வேகத்தில் போனால் மனிதர்களுக்கு வயதாகாது. இதே ஒளியை விட வேகமாக போனால் மனிதர்கள் தங்களுடைய இறந்த காலத்திற்கு செல்லலாம் என்று உறுதிப்படுத்தினார். ஐன்ஸ்டீன், நாதன் ரோசன் மற்றும் ஹாக்கிங் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது நமக்கு ஒன்றுமட்டும் தெளிவாகிறது.ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் காலப்பயணம் சாத்தியமே. அதற்குத் தடையாக இருப்பது ஒளியின் வேகத்தில் பயணிப்பது மட்டுமே. அது கண்டுபிடிக்கப்பட்டால் காலப்பயணம் சாத்தியமே.

Time Travel in Tamil

இப்படி பல விடை தெரியாத கேள்விகள் நம் முன்னே நிற்கும்போது இன்னும் 4 ஆண்டுகளில் காலப்பயணத்திற்கான இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்று எதைவைத்து இப்படி பரவுகிறது என்பது தெரியவில்லை. காலப்பயணம் சாத்தியமா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறோம் நீங்கள்தான் நீதிபதிகள்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு