Tata Play Fiber 50Mbps Plan-டாடாவின் புதிய பிளான்..! அன்லிமிட்டட் டேட்டா..!

Tata Play Fiber 50Mbps Plan-டாடாவின் புதிய பிளான்..! அன்லிமிட்டட் டேட்டா..!
X

Tata Play Fiber 50Mbps Plan-டாடா பிளே ஃபைபர் திட்டங்கள் (கோப்பு படம்) 

டாடா அறிமுகப்படுத்தும் புதிய பிளானில் மாதம் ரூ.900 போதும். 365 நாட்கள் வேலிடிட்டி.. 22 ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் டேட்டா பெறலாம்.

Tata Play Fiber 50Mbps Plan, Tata, Tata Play Fiber Plan, Tata Play Fiber 50Mbps Plan OTT, Tata Play Fiber 50Mbps Plan Validity, Tata Play Fiber 50Mbps Plan Data, Tata Play Fiber 50Mbps Plan Speed, Tata Play Fiber 50Mbps Plan Recharge, Tata Play Fiber 50Mbps Plan Voice, Tata Play Fiber 50Mbps Plan Benefitts, Tata Play Fiber 50Mbps Plan Chennai

ஜியோ (Jio) , ஏர்டெல் (Airtel) நிறுவனங்களுக்கு நிகராக டாட்டா (Tata) நிறுவனம், மாதத்துக்கு ரூ.900 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டியோடு அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், 22 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனையும் கொடுக்கிறது. இதுகுறித்த விபரங்களை அறிவோம் வாருங்கள்.

பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களில் பலருக்கு ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் திட்டங்கள் மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால், அந்த நிறுவனங்களுக்கு நிகராக பல சலுகைகளை டாடா நிறுவனமானது, டாடா பிளே ஃபைபர் (Tata Play Fiber) திட்டங்கள் மூலம் வழங்கி வருகிறது. இந்த திட்டங்களில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் மூன்று ஃபைபர் திட்டங்களை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.


Tata Play Fiber 50Mbps Plan

இந்த திட்டங்களுக்கு நீண்ட மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ஆகவே, மூன்று மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரையில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் ஓடிடி சலுகைகள் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டங்களை பயன் தரக்கூடியதாக இருக்கும். இவற்றின் விலை, சலுகை மற்றும் வேலிடிட்டி விவரங்கள் பின்வருமாறு.

டாடா பிளே ஃபைபர் 50எம்பிபிஎஸ் திட்ட விவரங்கள் (Tata Play Fiber 50Mbps Plan Details): இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லேண்ட்லைன் வாய்ஸ் கால்கள் (Unlimited Landline Voice Calls), டேட்டா (Data) மற்றும் ஓடிடி (OTT) சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆகவே, 50 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

மொபைல் (Mobile), டிவி (TV), பிசி (PC) ஆகியவற்றில் இன்டர்நெட் கனெக்ட் செய்து கொள்ளலாம். அதேபோல லேண்ட்லைன் வாய்ஸ் கால் சலுகையும் வருகிறது. இதற்கான எக்விப்மெண்ட்ஸ் வாடிக்கையாளர்களே வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த சலுகைகள் போக முன்னணி ஓடிடி தளங்கள் உள்பட மொத்தமாக 22 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.

Tata Play Fiber 50Mbps Plan

ஆகவே, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (SunNXT), வூட் செலக்ட் (Voot Select), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஹங்கமா பிளே (Hungama Play), எம்எக்ஸ் பிளேயர் (MXPlayer), வூட் கிட்ஸ் (Voot Kids), ஈராஸ் நவ் (Eros Now), எபிக்ஆன் (EpicON) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அதேபோல ஷீமரூமி (ShemarooMe), ஹோய்சோய் (Hoichoi), சாவ்பல் (Chaupal), பிளானட் மராத்தி (Planet Marathi), டாக்குபே (Docubay), கியூரியாசிட்டி ஸ்ட்ரீம் (Curiosity Stream), ரீல்டிராமா (Reeldrama) மற்றும்

நம்மபிளிக்ஸ் (NammaFlix) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷனும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, டிவி சேனல்களுக்கு நிகரான ஷேக்களையும், மூவிக்களையும் பார்த்துக்கொள்ள முடியும்.

இதுவொரு பிராட்பேண்ட் திட்டம் (Broadband Plan) என்பதால் 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில், 3 மாத திட்டம் ரூ.2,850 விலையிலும், 6 மாத திட்டம் ரூ.5,550 விலையிலும், 12 மாத திட்டம் ரூ.10,800 விலையிலும் கிடைக்கிறது. இதற்கான மாதாந்திர செலவை பார்த்தால் ரூ.900 மட்டுமே தேவைப்படுகிறது. இது சற்று அதிகப்படியான தொகைப்போல தோன்றலாம்.

Tata Play Fiber 50Mbps Plan

.ஆனால், வருடம் முழுவதும் அன்லிமிடெட் டேட்டா மற்றும் லேண்ட்லைன் கால், ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் கிடைப்பதால், வேறு எந்த திட்டமும் உங்களுக்கு தேவைப்படாது. இந்த திட்டங்களை பெற அதன் விலை மட்டுமல்லாமல், கூடுதலாக ரூ.1000 செக்யூரிட்டி டெபாசிட் கட்ட வேண்டும். இந்த தொகை திருப்பி கொடுக்கப்பட்டுவிடும். அதேபோல இன்சாலேஷன் சார்ஜ் ரூ.500 கொடுக்க வேண்டும்.

Tags

Next Story
துணை வட்டாட்சியரிடம் ரூ. 2 கோடி மோசடி..! 3 போ் மீது வழக்குப் பதிவு..!