டைட்டனின் அட்டகாச ஸ்டைலிஷ் ஸ்மார்ட்வாட்ச்..! இது ஜென்ட்ஸ் அண்ட் லேடீஸ் ஸ்பெஷல்..!

டைட்டனின் அட்டகாச ஸ்டைலிஷ் ஸ்மார்ட்வாட்ச்..! இது ஜென்ட்ஸ் அண்ட் லேடீஸ் ஸ்பெஷல்..!
X

டாடாவின் டைட்டன் ஸ்மார்ட்வாட்ச் 

டாடாவின் டைட்டன் நிறுவனம் புதிய பிரீமியம் ரக ஸ்மார்ட்வாட்சுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக உங்கள் ஆடைகளின் வண்ணங்களுக்கு ஏற்ப, பெண்களுக்கு செம வாட்ச்.

டைட்டன் வாட்ச் என்றாலே அதன் தரம், அழகான கம்பீரமான தோற்றம் நம் கண்களுக்குள் தானே வந்து நிற்கும். அந்த வகையில் டைட்டனின் பண்டிகைக்கால தயாரிப்புகளை வாங்கி மகிழுங்கள்.

டைட்டன் நிறுவனம் இந்தியாவில் புதிய பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கிரவுன் கலெக்ஷன். தினசரி உங்கள் ஆடைகளின் வண்ணங்களுக்கு ஏற்ப ஃபேஷன் மற்றும் பண்டிகை கால ஆடைகளுக்கு ஏற்றவாறு அட்டகாச டிஸைனுடன் இந்த ஸ்மார்ட் வாட்ச் கலெக்டின் இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. .

இந்த கலெக்டின் வரிசையில் பெண்களுக்கான Titan Elixir மற்றும் Titan Valerie மற்றும் ஆண்களுக்கான Titan Maestro மற்றும் Titan Heritage ஆகியவை டிசைனில் கண்ணைக்கவரும் வகையில் உள்ளன. புதிய கலெக்டின் விலை ரூ.9,995 இல் தொடங்குகிறது. புதிய டைட்டன் ஸ்மார்ட்வாட்ச்கள் பற்றி மேலும் நாம் தெரிந்துகொள்வோம் வாங்க.

Titan Elixir மற்றும் Titan Valerie: விலை மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள்

Titan Elixir ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.13,995 முதல். தொடங்குகிறது. அதன் பெல்ட்டில் பீங்கான் உட்செலுத்தப்பட்ட வளையல் போன்ற அமைப்புடன் வருகிறது. வைர வெட்டு முகம் கொண்ட கண்ணாடி அதற்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.

மறுபுறம், டாடா வலேரி, 18 மிமீ மெஷ் மற்றும் கூடுதல் சிலிகான் ஸ்ட்ராப் கொண்ட படிகம் பதிக்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்வாட்சுகளும் SOS அழைப்பு, BP மற்றும் சிறந்த AMOLED டிஸ்ப்ளேவுடன் சரும வெப்பநிலை கண்காணிப்பு போன்ற அம்சங்களுடன் வருகின்றன. வேலரியின் ஆரம்ப விலை ரூ.9,995.

Titan Maestro மற்றும் Titan Heritage: விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

Titan Maestro ஸ்மார்ட்வாட்ச் ரூ.13,995 என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது. இது அறுவை சிகிச்சை பொருட்கள் தயாரிக்கப்படும் உயர் தர உலோகத்தினால் உருவாக்கப்பட்டது. மேலும் 3D மெனு ஸ்டைல், தனிப்பயனாக்கக்கூடிய UI மற்றும் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே போன்ற அம்சங்களைக் கொண்டது. கூடவே முழு துருப்பிடிக்காத-எஃகு கட்டுமானத்தைக் கொண்டுள்ளது. இது கூடுதல் சிலிகான் பட்டையுடன் பொருத்தப்பட்டுள்ளது, 10 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

மறுபுறம், டைட்டன் ஹெரிடேஜ் முழு துருப்பிடிக்காத எஃகு வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் தெளிவான AMOLED டிஸ்ப்ளே, தீம் அடிப்படையிலான தனிப்பயனாக்கங்கள், ஒருங்கிணைந்த ஸ்ட்ராப் வடிவமைப்புடன் டைனமிக் UI அனுபவங்களுடன் வருகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.11,995.

Titan Smart Crown கலெக்டின் கிடைக்கும் இடங்கள்

Titan Smart Crown கலெக்டின் Titan World, Shopper Stop, Lifestyle மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட மல்டி பிராண்ட் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும். www.titan.co.in என்ற இணையதளத்தில் இருந்து ஆன்லைன் மூலமாகவும் இதை வாங்கலாம்.

Tags

Next Story
கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் தார் சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!