வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய அப்டேட்

வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய அப்டேட்
X
கடந்த சில வருடங்களாகவே வாட்ஸ் அப் நிறுவனம் மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தொடர்ந்து தகவல் வெளிவந்தது.

வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு புதிதாக மல்டி டிவைஸ் சப்போர்ட் என்னும் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அம்சமானது முதலில் டெஸ்க் டாப் பதிப்புகளுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தனது தளத்தை மேம்படுத்தி பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களாகவே இணையத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணம் இருந்து வந்தது.

தற்போது இதை உறுதி செய்யும் வகையில் மார்க் சுக்கர்பெர்க் விரைவில் மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சம் என்றால் ஒரே நேரத்தில் பல சாதனங்களில் தங்கள் வாட்ஸ் அப் கணக்கை பயனர்கள் பயன்படுத்த முடியும் என்பதே. அதாவது ஒரு தொலைபேசியுடன் இணைந்து கூடுதலாக 4 சாதனங்கள் என மொத்தம் ஒரே நேரத்தில் 5 சாதனங்களில் தங்கள் வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்த முடியும். இந்த அம்சம் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த அம்சத்துக்கான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி இதனை சோதனை செய்யும் வகையில் முதற்கட்டமாக வலை, டெஸ்க்டாப் பயனர்களுக்கு மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. விரைவில் இந்த அம்சம் மேலே குறிப்பிட்ட பயனர்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அம்சத்தை பழைய வாட்ஸ் அப் பதிப்புகளை பயன்படுத்தும் பயனர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது என்றும் எனவே இரு தரப்பினரும் புதிய பதிப்புகளை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story