புதன் கிரகத்தில் கொட்டிக்கிடக்கும் வைரம்..!
புதன் கோள்
பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில்இருக்க வாய்ப்பு இருப்பதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சூரிய குடும்பத்தில் முதலாவதாக உள்ள கிரகம் புதன். 3-வது இடத்தில் உள்ள பூமிக்கு அருகில் உள்ளது. இந்நிலையில், சீனா மற்றும் பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதன்கிரகத்தில் படிந்துள்ள வைரங்கள் பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
இது தொடர்பான அறிக்கை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: புதன் கிரகத்தில் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள் இருக்க வாய்ப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது 9 மைல் (14 கி.மீ.) தடிமனில் இருக்கும் என தெரிகிறது என கூறப்பட்டுள்ளது.
புதன் கிரகத்தில் இருக்கும் இந்த கனிமங்களால் எந்த அளவு பூமிக்கு பயன் கிடைக்கும் என்பது தொடர்பான ஆய்வுகளும் நடந்து வருகின்றன.
நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கிரகம் மற்றும் சூரியனுக்கு அருகில் உள்ள புதன் பூமியின் சந்திரனை விட சற்று பெரியதாக இருக்கும். புதனின் மேற்பரப்பில் இருந்து, சூரியன் பூமியில் இருந்து பார்க்கும் போது மூன்று மடங்கு பெரியதாக தோன்றும், மேலும் சூரிய ஒளி ஏழு மடங்கு பிரகாசமாக இருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu