ஜியோ கூரை பிச்சிக்குது.. மாதம் ரூ.129 போதும்...
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை தூக்கி சாப்பிடும் விதமாக ஜியோ நிறுவனம், 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்துக்கு மாதாந்திர கட்டணமாக வெறும் ரூ.129-ஐ நிர்ணயித்துள்ளது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 5ஜி டேட்டா போன்ற நினைத்து பார்க்காத சலுகைகளை கொடுக்கிறது.
ஜியோ (Jio) வருகைக்கு பிறகு ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea), பிஎஸ்என்எல் (BSNL) போன்ற எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. கஸ்டமர்களை தக்கவைக்க புதுப்புது திட்டங்களையும், ஆஃபர்களையும் கொடுத்து வந்தாலும் ஜியோ கொடுக்கும் அடிமட்ட விலைக்கு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்க முடியவில்லை.
அந்த வரிசையில், அடிமட்ட விலையில் 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை களமிறக்கி மற்ற நிறுவனங்களை தூக்கி சாப்பிட்டு விட்டது ஜியோ நிறுவனம். மாதாந்திரம் ரூ.129 செலவில் 1 வருடத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் 5ஜி டேட்டா போன்ற சலுகைகளை இந்த திட்டம் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் முழு விவரம் இதோ.
ஜியோ ரூ 1559 திட்ட விவரங்கள் (Jio Rs 1559 Plan Details): ஜியோவின் வேல்யூ திட்டங்களின் கீழ் இந்த ப்ரீபெய்ட் திட்டம் வருகிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸ் மற்றும் அமிடெட் 5ஜி டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன. மிகவும் மலிவான விலைக்கு கிடைப்பதால், வாய்ஸ் கால்களுக்கு முக்கித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த திட்டத்தில் தினசரி டேட்டா சலுகை கிடைக்காது. இருப்பினும், 24 ஜிபி லம்ப்-சம் டேட்டா (Lump sum Data) டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த 24 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி நாட்களுக்கு முன்பாகவே பயன்படுத்தி விட்டாலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பயன்படுத்த முடியும்.
அதேபோல, ஜியோ வெல்கம் ஆஃபர் பெறும் கஸ்டமர்கள், வருடம் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகை கிடைக்கிறது. டேட்டாவை போலவே மொத்தமாக 3,600 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களின் சலுகையையும் பயன்படுத்தலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு மொத்தமாக 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, மாதத்துக்கு கணக்கிட்டு பார்த்தால், வெறும் ரூ.129 மட்டுமே செலவாகிறது. ஒருவேளை தினசரி டேட்டா சலுகை வேண்டுமானால், பின்வரும் திட்டத்தை பாருங்கள்.
ஜியோ ரூ 2545 திட்ட விவரங்கள் (Jio Rs 2545 Plan Details): இந்த திட்டத்துக்கும் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், தினசரி டேட்டா சலுகையை இந்த திட்டத்தில் பயன்படுத்த முடியும். ஆகவே, தினசரி 1.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. மொத்தமாக 504 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடிகிறது.
1.5 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேக டேட்டாவை பயன்படுத்தலாம். முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. அதேபோல ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆப்கள் சலுகை உள்ளது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை பொருந்தும். இந்த திட்டத்துக்கு மாதாந்திர செலவை கணக்கிட்டால், ரூ.212ஆக இருக்கிறது. ஆகவே, இந்த 2 திட்டங்களும் எப்படி பார்த்தாலும் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் கொடுக்கவே முடியாத சலுகைகளை கொண்டிருக்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu