'ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை (JWST), Doodle-ல் கொண்டாடும் Google..!
James Webb Space Telescope-ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி eduththa
James Webb Space Telescope-நாசாவின் அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை பெருமைப்படுத்தும்விதமாக (JWST) கூகுள் டூடுலில் கொண்டாடியுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட பிரபஞ்சத்தின் மிக ஆழமான,அற்புதமான புகைப்படத்தை கொண்டாடும் வகையில் இந்த சிறப்பு டூடுல் உள்ளது.
டிசம்பர் 25, 2021 அன்று ஏவப்பட்ட தொலைநோக்கி, முக்கியமாக வானில் அகச்சிவப்பு கதிர்களை கிரகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய விண்வெளி ஆப்டிகல் தொலைநோக்கி ஆகும். அதன் விதிவிலக்கான அகச்சிவப்பு கதிர்களை உள்வாங்கும் திறன் காரணமாக, தொலைநோக்கி தொலைதூர அல்லது மங்கலான பொருட்களை கூட தெளிவாக பார்க்க வானியலாளர்களுக்கு உதவுகிறது.
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப், நட்சத்திரக்கூட்டங்கள் முதல் விண்மீன் திரள்களின் உருவாக்கம் ஆகியவற்றைக் உற்று கவனிக்கவும் வானியல் மற்றும் அண்டவியல் முழுவதும் பரந்த அளவிலான ஆய்வுகளை சாத்தியமாக்குகிறது.
நேற்று (செவ்வாய்க்கிழமை), நாசாவின் JWST கரினா நெபுலாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் மற்றும் தனிப்பட்ட நட்சத்திரங்களை வெளிப்படுத்துவதில், இது முன்னர் தெளிவற்றதாக காட்டியது. தற்போது காஸ்மிக் குன்றின் புதிய படங்கள், அண்டத் துகள்கள் வழியாக அலைந்து நட்சத்திரங்களின் உருவாக்கத்தை படம் பிடிக்க JWST அதன் சிறந்த திறன்களை நிரூபிக்கின்றன.
வானியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, நட்சத்திர உருவாக்கத்தின் ஆரம்ப கட்டங்களில் உள்ள பொருட்களை கைப்பற்றுவது கடினம். இருப்பினும், வெப்பின் தொலைநோக்கியின் தீவிர உணர்திறன் மற்றும் இடஞ்சார்ந்த கிரகித்துக்கொள்ளும் திறன் இருப்பதால் சிறந்த இமேஜிங் திறன்களுடன், அது தற்போது சாத்தியமாகிறது.
James Webb Space Telescope-பளபளக்கும் நட்சத்திரங்களால் "மலைகள்" மற்றும் "பள்ளத்தாக்குகள்" கொண்ட இந்த நிலப்பரப்பு உண்மையில் கரினா நெபுலாவில் உள்ள NGC 3324 என்று அழைக்கப்படும் இடத்தின் அருகிலுள்ள, இளம், நட்சத்திரத்தை உருவாக்கும் பகுதியின் விளிம்புப்பகுதியாகும். நாசாவின் புதிய ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் அகச்சிவப்பு ஒளி மூலம் படம்பிடிக்கப்பட்ட இந்த படம் முதன்முறையாக நட்சத்திர பிறப்புகளின் கண்ணுக்கு தெரியாத பகுதிகளை புலப்பட வைக்கிறது என்று நாசா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
JWST இன் தொடக்க வளர்ச்சி 1996 ம் ஆண்டில் தொடங்கியது. 1999 ம் ஆண்டு , 2007 ம் ஆண்டு, 1 பில்லியன் US டாலர் பட்ஜெட்டில் தொடங்கும் நோக்கத்துடன் இரண்டு கருத்துருக்கள் தொடங்கப்பட்டன. பல ஆண்டுகளாக, திட்டம் பல சவால்களை எதிர்கொண்டது. இருப்பினும், 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 2016ம் ஆண்டு இத்திட்டம் முடிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu