ChatGPT-ன் அசுர வளர்ச்சி..! மீளாத பிரமிப்பில் உலகம்..! இனி யாருக்கான உலகமிது?
incredible growth of Chatgpt-சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (கோப்பு படம்)
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? (Artificial Intelligence)
செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியலின் மேம்பட்ட வளர்ச்சியை காட்டும் உச்ச நிலையாகும். இது நுட்பமான இயந்திரங்களை உருவாக்குவதன் மூலம் மனிதர்களைப்போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் ஆகும். செயற்கைஅறிவாற்றல் என்பது கொடுக்கப்படும் உள்ளீட்டிற்கு தகுந்தாற்போல அதுவாகவே செயல்படுவதுதான் செயற்கை நுண்ணறிவு ஆகும்.
incredible growth of Chatgpt
அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு செயலில் உலகின் மிக வேகமான வளர்ச்சியை எட்டி மிகப்பெரிய சாதனையை ChatGPT செய்துள்ளதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஓபன்ஏஐயின் பிரபலமான சாட்போட்டான ChatGPT, தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களில் ஜனவரி மாதத்தில் 100 மில்லியன் பயனர்களை எட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது வரலாற்றில் மிக வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் பயன்பாடாக உள்ளது என்று UBS (Union Bank of Switzerland)ஆய்வு தெரிவிக்கிறது.
பகுப்பாய்வு நிறுவனமான Similarweb இன் தரவை மேற்கோள் காட்டி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ஜனவரி மாதத்தில் சராசரியாக சுமார் 13 மில்லியன் தனிப்பட்ட பார்வையாளர்கள் ChatGPT ஐப் பயன்படுத்தியுள்ளனர். இது டிசம்பரின் அளவை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
20 ஆண்டுகளில் இணைய பயன்பாட்டை உற்று கவனிக்கும்போது, இதைப்போன்ற நுகர்வோர் பயன்பாட்டு ஆப் -ன் ஒரு வேகமான வளர்ச்சிப் பாதையை நாங்கள் கண்டிருக்கவில்லை என்று UBS ஆய்வாளர்கள் ஆச்சர்யமாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
incredible growth of Chatgpt
சென்சார் டவரின் தரவுகளின்படி, TikTok 100 மில்லியன் பயனர்களை அடைய 9 மாதங்கள் எடுத்துக்கொண்டது. இன்ஸ்டாகிராம் - 2.5 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.
ChatGPT ஆனது கொடுக்கப்படும் உள்ளீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் கட்டுரைகள், செய்திகள், நகைச்சுவைகள் மற்றும் கவிதைகளை உருவாக்கிக் கொடுக்கும் திறன் பெற்றுள்ளது. மைக்ரோசாப்ட் கார்ப் (MSFT.O) நிறுவனத்தின் உதவியுடன் OpenAI, நவம்பர் இறுதிவரை பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைக்கச் செய்தது.
கடந்த வியாழன் அன்று, (ஜூன் 8ம் தேதி) OpenAI ஆனது $20 மாதாந்திர சந்தாவை அறிவித்தது. ஆரம்பத்தில் அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே இருந்தது. இது மிகவும் நிலையான மற்றும் வேகமான சேவையையும், புதிய அம்சங்களை முதலில் முயற்சி செய்வதற்கான வாய்ப்பையும் வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
incredible growth of Chatgpt
ChatGPT இன் வைரல் வெளியீடு மற்ற AI நிறுவனங்களுக்கு எதிராக OpenAIக்கு முதல் மூன்று நன்மைகளை வழங்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 1. வளர்ந்து வரும் பயன்பாடு, 2. OpenAI இல் கணிசமான கம்ப்யூட்டிங் செலவை சுமத்துகிறது, 3. மேலும் சாட்போட்டின் பதில்களைப் பயிற்றுவிக்க உதவும் மதிப்புமிக்க கருத்துக்களை வழங்கியுள்ளது.
கம்ப்யூட்டிங் செலவை ஈடுகட்ட சந்தா வருவாய் உதவும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
ChatGpt கருவியில் தவறான கல்வித் தகவல் எளிதாக கிடைப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓபன்ஏஐயில் பல பில்லியன் டாலர் ரொக்கம் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் ஏற்பாட்டுக்காக முதலீடு செய்வதை அறிவித்தது.
ChatGPT கருவியின் OpenAI- ன் அதீத வளர்ச்சி உலகையே பிரம்மிக்க வைத்துள்ளது. 100 மில்லியன் பயனாளர்களை அடைய வெறும் 2 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளன.
incredible growth of Chatgpt
உலகில் அறிமுகமான பல கண்டுபிடிப்புகள் இந்த 100 மில்லியன் பயனாளர்களை அடைய எடுத்துக்கொண்ட காலத்தை நாம் இப்போது பார்ப்போம்:-
1. தொலை பேசி - 100 மில்லியன் பயனாளர்களைத் தொட 75 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.
2. மொபைல் போன் - 16 ஆண்டுகள்
3. WWW (World Wide Web) - 7 ஆண்டுகள்
4. iTunes - 6.5 ஆண்டுகள்
5. ட்விட்டர் - 5 ஆண்டுகள்
6. முகநூல் - 4.5 ஆண்டுகள்
7. வாட்ஸ்ஆப் - 3.5 ஆண்டுகள்
8. இன்ஸ்டாகிராம் - 2.5 ஆண்டுகள்
9. ஆப்பிள் ஆப் ஸ்டோர் - 2 ஆண்டுகள்
10. டிக்டாக் - 9 மாதங்கள்
11. ChatGpt - 2 மாதங்கள்
மற்ற கண்டுபிடிப்புகளுக்கு 100 மில்லியன் பயனாளர்களைத் தொட எடுத்துக்கொண்ட காலங்கள் நீண்டு விரிந்த காலங்களாக இருக்கும்போது ChatGpt - தனது 100 மில்லியன் பயனாளர்களைத் தொட வெறும் 2 மாதங்களே போதுமானதாக இருந்துள்ளது. எனில் அதன் பயன்பாடுகள் அபரித வளர்ச்சியை நோக்கி இருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. எதிர்கால உலகம் இனி AI கைகளில் உள்ளது என்பது உண்மை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu