இந்தியர்களை கவர கூகுள் மேப்ஸ்சில் புதிய வசதி..!
கூகுள் மேப் புதிய அம்சங்களை வழங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் சாலைப்பயணங்களுக்கு கூகுள் மேப்ஸ்கள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இப்போது வளர்ச்சித் திட்டங்கள் மிக வேகமாக நடந்து வருகிறது. கூகுள்மேப்ஸ்களை பார்த்து செல்லும் ரோடுகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டு விடுகின்றன.
பல இடங்களில் குறுகலாக மாறி விடுகின்றன. பல இடங்களில் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. இது போன்று நிறைய குளறுபடிகள் இருப்பதால் உள்ளூர் ரோடுகள் குறித்த அனுபவம் இல்லாமல், முழுக்க கூகுள் மேப்ஸ்களை பயன்படுத்துவது பெரும் குழப்பத்தை தருகிறது.
இந்த சிக்கல்களில் இருந்து பயனாளிகளை விடுவிக்க கூகுள் மேப்ஸ்-ல் புதிய அம்சங்களைச் சேர்க்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. நான்குசக்கர வாகன ஓட்டிகள் குறுகலான மற்றும் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளை தவிர்த்து அகலமான பாதையில் செல்வதற்கு வழிகாட்ட ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளது.
இந்த வசதியில் தெருவின் அமைப்பு, சாலையின் அகலம், கட்டிடங்களுக்கு இடையேயான தூரம் போன்ற தகவல்களை அறியலாம். இது நான்கு சக்கர வாகன ஓட்டிகள் குறுகலான பாதைகளை தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் குறுகிய ரோடுகள் வழியாக எளிதாக செல்லவும் இந்த வசதி வழிவகுக்கும்.
பல இடையூறுகள்
கூகுள் மேப் பயன்படுத்திச் சென்ற பலர் இடம் மாறிச் சென்றதும், கேரளாவுக்குச் சென்றவர்கள் கால்வாய்க்குள் வீழ்ந்ததும், இன்னும் சிலர் காரை படிக்கட்டுகளில் ஏற்றியதும் போன்ற சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறியதை நாம் பார்த்திருக்கிறோம். அதனால் இப்போது கூகுள் இதைப்போன்ற சிக்கல்கள் வராமல் தடுக்க புல புதிய உத்திகளை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu