EMI இல் ஸ்மார்ட்போன் வாங்குறீங்களா..? அப்ப இந்த 5 விஷயத்தை கவனிங்க..!

EMI இல் ஸ்மார்ட்போன் வாங்குறீங்களா..? அப்ப இந்த 5 விஷயத்தை கவனிங்க..!
X

மொபைல் போன் -கோப்பு படம் 

EMI இல் ஒரு ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு நீங்கள் முடிவு செய்து இருந்தால் கண்டிப்பாக இந்த செய்தியை ஒருமுறை படித்துவிட்டு வாங்குங்கள்.

EMI இல் மொபைல் போனை வாங்குவது,,நுகர்வோர் பணம் செலுத்துவதை எளிமையாக்கும் ஒரு வழியாகும். மொத்த தொகையை தவணைகளாக பிரிப்பதன் மூலம் வாங்குவதை மிகவும் எளிதாக ஆக்குகிறது. எவ்வாறாயினும், முதலில் EMI திட்டத்தில் ஒரு பொருளை வாங்கும் முன் அது சரியான தேர்வு என்பதை உறுதிப்படுத்த பல முக்கியமான காரணிகளை கருத்தில் கொண்டு , வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்கக் கட்டணங்கள் உட்பட பல்வேறு விதிமுறைகளையும் முழுமையாக ஒப்பிட்டுப் பார்த்து தேர்வு செய்வது அவசியம்..

இரண்டாவதாக, மாதாந்திர தவணைத்தொகையை நீங்கள் வசதியாக செலுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்த உங்கள் பட்ஜெட்டை மதிப்பிடுங்கள். . மூன்றாவதாக, அனைத்து நிபந்தனைகள் மற்றும் சாத்தியமான மறைமுக கட்டணங்களை முழுமையாக தெரிந்துகொள்ள கடன் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைப் படிக்கவும். இறுதியாக, திருட்டு அல்லது சேதத்திலிருந்து பாதுகாக்க காப்பீடு செய்வதைக் கவனியுங்கள்.

EMI என்பது என்ன?

EMI என்பது Equated Monthly Instalment. இது ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் கடனாளி கடன்பெற்ற நிறுவனத்துக்கு திரும்பிச் செலுத்தும் நிலையான கட்டணத் தொகையாகும். வட்டி மற்றும் அசல் இரண்டையும் செலுத்த EMIகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையாக செலுத்தப்படும். இது தனிநபர் கடன்கள், வீட்டுக் கடன்கள், கார் கடன்கள் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் மொபைல் போன்கள் போன்ற பொருட்களை வாங்குவதற்கு எளிதான தவணை முறையை கடன் நிறுவனங்கள் வழங்குகின்றன.

EMIயில் போன் வாங்குவது சரியான முடிவாக இருக்குமா?

EMI இல் போனை வாங்கும் போது, ​​வட்டி விகிதங்கள், மறைமுக கட்டணங்கள் மற்றும் EMI இல் பணம் செலுத்தும் போது போனின் மொத்த விலை ஆகியவற்றை அறிந்துகொள்வது முக்கியம் ஆகும். போன் வாங்கும்போது அதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நன்றாகப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

கீழே தரப்பட்டுள்ள காரணங்களை தெளிவாக படித்து அறிந்துகொண்டால் ஒரு தெளிவான முடிவுடனும் எந்தவொரு நிதிக் குறைபாடுகளிலும் சிக்கிக்கொள்ளாமல் ஒரு போனை வாங்குவதற்கு முயற்சி எடுக்கலாம்.

EMIயில் ஒரு போனை வாங்கும்போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய 5 விஷயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பட்ஜெட்டுக்கு ஏற்ற ஷாப்பிங்

பல கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மொபைல் போன்களுக்கான EMI நிதியுதவியை வழங்குகிறார்கள். கடனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் வெவ்வேறு நிறுவனங்களின் வட்டி விகிதங்கள், செயலாக்கக் கட்டணம் மற்றும் பிற விதிமுறைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். சிறந்த மற்றும் நமது பட்ஜெட்டுக்கு ஏற்ப ஷாப்பிங் செய்வதன் மூலம், கடன் காலத்தில் கணிசமான அளவு பணத்தை நாம் மிச்சப்படுத்த முடியும்..

உங்கள் பட்ஜெட்டை கருத்தில் கொள்வது முக்கியம்

EMI இல் போனை வாங்க முடிந்தால் அது சிறந்த முடிவு என்று அர்த்தமில்லை. புதிய போனுக்கான பட்ஜெட்டில் வட்டி மற்றும் கட்டணங்கள் உட்பட கடனுக்கான மொத்தச் செலவைக் கணக்கிடுவது அவசியமாகும். நிதிச் சிக்கலைத் தவிர்ப்பதற்காக உங்கள் மாதாந்திர பட்ஜெட்டுக்குள் EMI வசதியாக இருக்குமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதும் அவசியம் ஆகும். .

நன்றாகப் படித்து கையொப்பம் இடுவது அவசியம்

ஏதேனும் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் நன்றாக வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கவனமாக படிக்கவும். வட்டி விகிதம், செயலாக்கக் கட்டணம் மற்றும் பொருந்தக்கூடிய பிற கட்டணங்களைப் புரிந்து கொள்ளுங்கள். EMI திட்டத்தின் காலம், அபராதம் இல்லாமல் முன்கூட்டியே செலுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மை மற்றும் நீங்கள் பணம் செலுத்தத் தவறினால் ஏற்பாடக்கூடிய நிபந்தனைகள் உள்ளிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படியுங்கள் .

மாதாந்திர தவணைத் தொகையை குறைப்பதற்காக கடன் காலத்தை நீட்டித்தல் கவர்ச்சிகரமானதாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக நாம் கணக்கெடுத்தால் அதிக வட்டியை நாம் செலுத்த வேண்டி வரும். அவ்வாறு நீண்டகால தவணை முறையைத் தேர்ந்தெடுக்கும் முன், கடனுக்கான மொத்தச் செலவைக் கவனமாக பரிசீலியுங்கள்.

இன்சூரன்ஸ் பெறுவதை உறுதிப்படுத்துங்கள்

உங்களுக்கு நிதி உதவி கிடைக்கும்போது உங்கள் போன் சேதமடைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நீங்கள் பொறுப்பாவீர்கள். இந்த எதிர்பாராத தருணங்களில் உங்களை பாதுகாக்க, தொலைபேசி காப்பீடு செய்வதைக் கவனியுங்கள். இத்தகைய துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளின் போது இன்சூரன்ஸ் நம்மை அச்சத்தில் இருந்து விடுபடவும் பண பாதுகாப்பையும் வழங்குகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!