தனிநபர் தகவல் பாதுகாப்புடன் AI பயன்பாடு : DuckDuckGo-வின் அசத்தல் திட்டம்..!

தனிநபர் தகவல் பாதுகாப்புடன் AI பயன்பாடு : DuckDuckGo-வின் அசத்தல் திட்டம்..!
X
தனிநபர் தகவல் பாதுகாப்பு அம்சங்களுடன் DuckDuckGo, AI உரையாடல்களுக்கான ஒரு புதிய திட்டத்தை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

DuckDuckGo will Allow to Use ChatGPT, Claude and Meta AI for Free, Chatgpt, Meta Ai, Duckduckgo, Claude, Anthropic, Openai, Ilama Ai

சமூக வலை தளங்களில் தனிநபர் தகவல் பாதுகாப்பு என்பது அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் தனி நபர் தகவல் பாதுகாப்பில் அக்கறை கொண்ட தேடுபொறி நிறுவனமான DuckDuckGo, தற்போது தனது பயனர்களுக்கு தனிப்பட்ட தகவல்களை பரிமாறாமல் அனாமதேயமாக பயன்படுத்திக்கொள்ள பிரபலமாக விளங்கும் AI chatbot-களை இலவசமாக வழங்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

DuckDuckGo will Allow to Use ChatGPT,

அந்த வகையில் OpenAI-யின் GPT-3.5 அடிப்படையிலான ChatGPT, Anthropic-ன் Claude 3 Haiku, Mixtra 8x7B மற்றும் Meta Llama 3 போன்ற பிரபலமான AI chatbot-களை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள இந்த வசதி பயனர்களுக்கு பெரிதும் உதவுகிறது.

தனிநபர் தகவல் பாதுகாப்புக்கு முன்னுரிமை

சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பயனர்கள் அடிக்கடி தங்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிவாகி விடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். தற்காலத்தில் தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருகிறது. இதைக்கருத்தில்கொண்டு தனிநபர் தகவல் பாதுகாப்பு அம்சத்துடன் ட uckDuckGo நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வசதி பயனர்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை.

ஏனெனில் AI தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த வேளையில், தனிநபர் தகவல் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. DuckDuckGo-வின் இந்த புதிய அம்சம், பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் AI chatbot-களை திங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும்.

DuckDuckGo will Allow to Use ChatGPT,

AI உரையாடல்களுக்கான புதிய வசதி:

"AI Chat" என்று அழைக்கப்படும் இந்த புதிய அம்சம், DuckDuckGo தேடுபொறியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களுக்கு விருப்பமான AI chatbot-ஐத் தேர்வு செய்து, தங்களுக்குத் தேவையான கேள்விகளைக் கேட்கலாம் அல்லது உரையாடல்களைத் தொடங்கலாம். DuckDuckGo, பயனர்களின் IP முகவரியை மறைத்து, chatbot-களுடன் சுயமுகவரியற்று அநாமதேயமாக தொடர்பு கொள்ள உதவுகிறது. இது, பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதைத் தடுக்கிறது.

இலவச சேவை மற்றும் கட்டணத் திட்டம்:

DuckDuckGo-வின் AI Chat வசதி, தற்போது இலவசமாகக் கிடைக்கிறது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பயன்படுத்தக்கூடிய வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. DuckDuckGo நிறுவனம் விரைவில் கட்டணத் திட்டத்தையும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கட்டணத் திட்டத்தில், அதிக செயல்திறன் கொண்ட AI மாடல்களைப் பயன்படுத்தவும், அதிக வரம்புகளுடன் உரையாடல்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.

DuckDuckGo will Allow to Use ChatGPT,

DuckDuckGo-வின் அணுகுமுறை:

DuckDuckGo, பயனர்களின் தனிநபர் தகவல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதில் எப்போதும் உறுதியாக உள்ளது. அதற்கு முன்பு, DuckDuckGo தனது தேடுபொறியில் தனிநபர் தகவல்களைச் சேகரிக்காமல் தந்து தேடுபொறியை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்து இருந்தது. அதையே பின்பற்றி தற்போது, AI chatbot-களைப் பயன்படுத்துவதற்கும் பயனர்களின் தனிநபர் தகவல் பாதுகாக்கப்படுவதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது.

AI Chat-ன் நன்மைகள் என்ன?

தனிநபர் தகவல் பாதுகாப்பு: DuckDuckGo-வின் AI Chat, பயனர்களின் தனிநபர் தகவல்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பிரபலமான AI chatbot-கள் :

OpenAI-யின் ChatGPT, Anthropic-ன் Claude 3 Haiku, Mixtra 8x7B மற்றும் Meta Llama 3 போன்ற பிரபலமான AI chatbot-களை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.

DuckDuckGo will Allow to Use ChatGPT,

எளிமையாக பயன்படுத்தும் முறை :

AI Chat-ஐ பயன்படுத்துபவர்கள் புதியவர்களாக இருந்தாலும் அல்லது தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்கள் கூட எளிதாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்களும் தயக்கமின்றி இதை பயன்படுத்தலாம்.

கல்வி, ஆராய்ச்சி மற்றும் படைப்பாற்றல்:

AI Chat, மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் படைப்பாளிகள் தங்கள் பணிகளை மேம்படுத்திக்கொள்ள இது பெரிதும் உதவுகிறது.

DuckDuckGo-வின் AI Chat வசதி, தனிநபர் தகவல் பாதுகாப்பு மற்றும் AI தொழில்நுட்பத்தை ஒரே நேரத்தில் வழங்குவதில் ஒரு முக்கியமான புதிய அணுகுமுறையாகும். இது, AI chatbot-களைப் பயன்படுத்துவதில் உள்ள தனிநபர் தகவல் பாதுகாப்பு கவலைகளை முற்றிலுமாக நீக்கி, AI தொழில்நுட்பத்தின் நன்மைகளை அனைவரும் பெற உதவுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!