அது என்னங்க டிஜிட்டல் காண்டம்..? பதின்ம வயது சிறுமிகளுக்கான பாதுகாப்பு சாதனம்..!
ரகசிய கண்களை அலறியடித்து ஓடச் செய்யும் டிஜிட்டல் காண்டம்
ஜெர்மன் பாலியல் ஆரோக்கிய பிராண்ட் பில்லி பாய் ஒரு புதிய தொழில்நுட்ப உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சில தனிப்பட்ட நெருக்கமான தருணங்களை உண்மையிலேயே பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதி செய்கிறது.
"கேம்டம்" என்று அழைக்கப்படும் அது "டிஜிட்டல் ஆணுறை" என்று உருவாக்கப்பட்டுள்ளது. சிலரது நெருக்கமான தருணங்களில் ஸ்மார்ட்போன்களின் கேமராக்கள் மற்றும் மைக்ரோஃபோன்களை முடக்குவதன் மூலம் அங்கீகரிக்கப்படாத பதிவுகளைத் தடுக்க இந்த பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு, வளர்ந்து வரும் ஆபாசப்படங்களை வெளியிட்டு பழிவாங்கும் செயல்களை எதிர்த்துப் போராடுவதற்கும், டிஜிட்டல் உலகில் முக்கியமான தரவுகளைப் பாதுகாப்பதற்கும் இது பெரிதும் உதவும்.
கேம்டம் செயலி
"ஜெர்மன் ஆணுறை பிராண்ட் பில்லி பாய் மற்றும் இன்னோசியன் பெர்லின் ஆகியோர் இணைந்து கேம்டம் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்மூலமாக மொபைல் சாதனங்களைத் தடுத்து உடலுறவின் போது தேவையில்லாத உள்ளடக்கங்களை பதிவு செய்வதை இது தடுக்கிறது. இதிலிருந்து ஒருவரின் அந்தரங்க விஷயங்கள் பாதுகாக்கப்படுகிறது. அந்தரங்க விஷயங்களை பாதுகாக்கும் முதல் வகையான டிஜிட்டல் ஆணுறை" என்று பில்லி பாய் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், "ஸ்மார்ட்ஃபோன் மூலம் அனுமதியின்றி புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஆடியோ எடுப்பது ஒருபோதும் எளிதாக இருப்பதில்லை. உலகெங்கிலும் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பதின்ம வயதினரிடையே இது ஒரு ஆபத்தான சூழ்நிலைக்கு வழிவகுத்தது. அந்தரங்க விஷயங்கள் கசிந்தவுடன், அது வைரஸைப் போல பரவுகிறது. அதைக் கண்காணிக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களிடையே மன உளைச்சல், மன அழுத்தம், வேலை இழப்பு மற்றும் தற்கொலை எண்ணங்களை ஏற்படுத்துகிறது.
30 நாடுகளில் தொடங்கப்பட்ட கேம்டம் செயலி, நெருக்கமான தருணங்கள் தனிப்பட்டதாக பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, அருகிலுள்ள ஸ்மார்ட்போன்களில் ரெக்கார்டிங் செயல்பாடுகளைத் தடுக்க புளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. பயனர்கள் விர்ச்சுவல் பட்டனை விரைவாக ஸ்வைப் செய்வதன் மூலம் பயன்பாட்டைச் செயல்படுத்திக்கொள்ள முடியும். இது அவர்களின் சாதனங்களில் பாதுகாப்புத் தடையை ஏற்படுத்தி தனிப்பட்ட தருணங்களை பாதுகாக்க துணைபுரியும்.
யாராவது கட்டுப்பாடுகளைத் தடுத்து முறியடிக்க முயற்சித்தால், Camdom உடனடியாக அந்த எச்சரிக்கை உணர்வை கண்டறிந்து பயனர்களை எச்சரிப்பதற்காக ஒரு அலாரத்தை அனுப்பி கூடுதல் பாதுகாப்பைச் செயல்படுத்தும். தனியுரிமைக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ஆப்ஸ் குழுவாக அதன் புளூடூத் வரம்பிற்குள் பல ஸ்மார்ட்போன் சாதனங்களை ஒரே நேரத்தில் தடுத்து நிறுத்தும் ஆற்றலுள்ளது.
அந்தரங்கத்தை பாதுகாத்துக்கொள்ள உடலுறவு கொள்வதற்கு முன், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாக வைத்து, அனைத்து கேமராக்கள் மற்றும் மைக்ரோஃபோன்களைத் தடுக்க ஒரு மெய்நிகர் பொத்தானை கீழே ஸ்வைப் செய்து கொள்ளவேண்டும்." என்று நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
"ஒரு பயனர் பாதுகாப்பை மீறி படம் எடுக்க முயற்சித்தால், ஒரு அலாரம் மூலமாக சாத்தியமான அச்சுறுத்தலை ஒலியாக எழுப்பி எச்சரிக்கை செய்கிறது. ஒரே நேரத்தில் குழுவாக பதிவு செய்ய முயற்சித்தால் தேவைப்படும் பல ஸ்மார்ட்போன் சாதனங்களையும் தடுத்துக்கொள்ள முடியும்."
பயனர்களை நோக்கமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்தை இணைப்பதன் மூலம், இந்த "டிஜிட்டல் ஆணுறை" டிஜிட்டல் யுகத்தில் தனிப்பட்ட தருணங்களைப் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. குறிப்பாக பதின்ம வயது பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தங்கள் அந்தரங்க விஷயங்களை வேறு யாரும் பகிர்ந்து விடாதபடி பாதுகாப்பதற்கு இந்த டிஜிட்டல் ஆணுறை பெரிய வரப்பிரசாதமாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu