100 ஆண்டுகளுக்கு பின்னர் தென்படாத சந்திரகிரகணம்..!
சந்திர கிரகணம் (கோப்பு படம்)
இந்தியாவில் சந்திரகிரகணம், சூரிய கிரகணம் தெய்வீக நிகழ்வுகளோடு தொடர்புடையதாக மதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே இந்த கிரகண காலத்தில் இந்தியாவில் முக்கிய நிகழ்வுகள் எதுவும் நிகழாது. குறிப்பாக மக்கள் வெளியில் வருவதற்கும், சாப்பிடுவதற்கும் கூட தயக்கம் காட்டுவார்கள். கோயில் நடைகள் அடைக்கப்படும். கிரகணம் முடிந்த பின்னர் கோயில்கள் சுத்தப்படுத்தப்பட்டு திறக்கப்படும். வீடுகளில் கூட பலர் குளித்து சாமி கும்பிட்டு தோஷம் கழித்த பின்னரே சாப்பிடுவார்கள். இப்படி மக்களின் வாழ்வோடு சந்திரகிரகணம் தொடர்புடையதாக மதிக்கப்படுகிறது.
நடப்பு ஆண்டின் முதல் கிரகணமான பெனும்பிரல் சந்திர கிரகணம் பங்குனி உத்திரத்தன்று காலை தொடங்கியது. 10.23 மணிக்கு தொடங்கிய கிரகணம் மாலை 03.02 மணி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் கிரகணம் நிகழ்ந்ததால் இந்தியாவில் இதனை பார்க்க முடியவில்லை. வடக்கு மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் கிரகணத்தை பார்த்தனர். இந்தியாவில் இந்த கிரகணம் வந்து சென்றதே தெரியவில்லை.
100 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலி பண்டிகை மற்றும் பங்குனி உத்திரம் நாளில் சந்திர கிரகணம் ஏற்பட்டது மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து கூறிய சாஸ்திரிகள் பலர், ‘பகலில் கிரகணம் ஏற்படுவதால் இந்தியாவில் தோஷ காலம் பொருந்தாது. கோயில்களில் நடை அடைக்கப்படவில்லை, பங்குனி உத்திர தினம் என்பதால் கோவில்களில் வழக்கம் போல திருவிழாக்கள் நடைபெற்றன’ என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu