'எனக்கு காயம் ஆறனும்..!' அறிவியல் படித்த ஒராங்குட்டான்..!?

எனக்கு காயம் ஆறனும்..! அறிவியல் படித்த ஒராங்குட்டான்..!?
இயற்கை உயிரினங்களுக்கு சில அபார சக்தியை கொடுத்துள்ளது. நாய் அல்லது பூனைகளுக்கு வயிற்று உபாதை ஏற்பட்டால் என்ன செய்யும் என்பதை நாம் பார்த்துள்ளோம்.

An Orangutan Treated His Wound with a Local Plant in Tamil,Wild Medicine, Zoologist Michael Huffman,Fibraurea Tinctoria,Woody Vine or Liana

பொதுவாகவே விலங்குகள் அவைகளுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை குணமாக்கிக்கொள்ள சில இயற்கை முறைகளை கையாள்வது வழக்கம். அது நாமும் அறிந்ததே. இந்த கட்டுரையில் ஒரு ஒராங்குட்டான் தனக்கு ஏற்பட்டிருந்த பெரிய காயம் ஒன்றை எப்படி குணமாக்கிக்கொள்கிறது என்பது நம்மை பிரம்மிக்க வைக்கிறது. அதை நீங்களும் படித்து அறிந்துகொள்ளுங்கள்.

ஏதோ இந்த ஓராங்குட்டான் சயன்ஸ் படிச்சமாதிரி மூலிகை இலையை பறிக்குது, மெல்லுது, பேண்டேஜ் போடுது..அடடா.. விட்டா டாக்டர் ஆகிடும்போல. அப்புறம் டாக்டர். ராகுஸ் எம்.பி.பி.எஸ்-னு பட்டம் கிடைச்சாலும் கிடைத்துவிடும்.(ராகுஸ் தான் நம்ம கட்டுரையின் ஹீரோ)

An Orangutan Treated His Wound with a Local Plant in Tamil

முதன்முறையாக, ஒரு ஒராங்குட்டான் தனது முகத்தில் இருக்கும் காயத்திற்கு மருந்திட்டு வைத்தியம் செய்து கொள்வதைக் காணமுடிந்தது என்று ஆய்வு செய்த விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.காயத்தை குணப்படுத்துவதற்கு உதவும் ஒரு இயற்கையான பொருளைப் பயன்படுத்தி ஒரு காட்டு விலங்கு காயத்தை கவனித்துக்கொள்வதற்கான முதல் சான்று இந்த ஒராங்குட்டான் மூலமாக கிடைத்துள்ளது என்று விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டுபிடிப்பை அறிவியல் அறிக்கைகளில் பகிர்ந்து கொண்டனர்.

இந்தோனேசியாவின் குனுங் லியூசர் தேசிய பூங்காவில் பெரிய குரங்குகளை ஆய்வு செய்து வந்தனர். அதன் சுவாக் பாலிம்பிங் ஆராய்ச்சி பகுதியில் சுமார் 150 ஒராங்குட்டான்கள் வாழ்கின்றன. விஞ்ஞானிகள் 1994 ஆம் ஆண்டு முதல் இந்த விலங்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஜூன் 2022 இல், ஆய்வாளர் உலில் அஜாரி, ராகுஸ் என்ற ஆண் சுமத்ரான் ஒராங்குட்டானை (போங்கோ அபெலி) கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தாவர இலைகளைப் பறித்து வாயில் வைக்கும் ஓராங்குட்டான்

An Orangutan Treated His Wound with a Local Plant in Tamil

அந்த குரங்கு ஒரு அடர்ந்த லியானா என்ற ஒரு மரக் கொடியின் இலையை மென்று கொண்டிருந்தது. பின்னர் நன்றாக மெல்லப்பட்ட அந்த இலை விழுதை அதன் கண் அருகே இருந்த ஒரு பழைய காயத்தின் மீது தேய்த்தது. இதை தொடர்ந்து பல நாட்கள் செய்து வந்தது. கன்னத்தில் ஏற்பட்ட திறந்த காயம் மீது மென்ற லியானா பேஸ்ட்டை தேய்த்தது.

இந்த காயம் வேறொரு ஆணுடன் நடந்த சண்டையில் அந்த ஒராங்குட்டானுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஓராங்குட்டானுக்கு விஞ்ஞானிகள் வைத்த பெயர் ராகுஸ். ராகுஸ் சுமார் ஏழு நிமிட இடைவெளியில் பேஸ்ட்டை பல முறை பயன்படுத்திக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.பின்னர் ராகுஸ் தனது காயத்தின் மீது செடியின் இலைகளில் இருந்து வடியும் ஒரு கூழ்மத்தை தடவியது. அவ்வாறு அது தடவப்பட்டதால் அங்கு ஒரு பேண்டேஜ் போட்டதுபோல் இருந்தது. ராகுஸ் அந்த இலைகளை கிட்டத்தட்ட ஒரு கட்டு போல பயன்படுத்தியது.

உள்ளூர் மக்கள், பாரம்பரிய மருத்துவத்தில் அதே தாவரத்தை (Fibraurea tinctoria) பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லியானா இலை பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுத்து மெதுவாக்குகிறது அல்லது கட்டுப்படுத்துகிறது. மேலும் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது. உள்ளூர் மக்கள் கூட காட்டு

விலங்குகளிடம் இருந்துதான் இந்த மருத்துவ முறைகளை கற்றறிந்து இருப்பார்கள்.

An Orangutan Treated His Wound with a Local Plant in Tamil

5 நாட்களில் குணமான காயம்

Isabelle Laumer என்பவர் ஆராய்ச்சிக் குழுவில் ஒரு அறிவாற்றல் உயிரியலாளர் ஆவார். அவர் ஜெர்மனியின் கான்ஸ்டான்ஸில் உள்ள விலங்கு நடத்தைக்கான மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அஸ்ஹாரியின் குறிப்புகளைப் படித்த பிறகு, "உடனடியாக மிகவும் உற்சாகமடைந்தார்" என்று அவர் நினைவு கூர்ந்தார். இந்த குரங்கு, "தனது காயத்திற்கு மட்டுமே சிகிச்சை அளித்துக்கொண்டது. ஆனால், உடலின் வேறு எங்கும் அந்த தாவர இலைகளை பூசிக்கொள்ளவில்லை. அதனால் முற்றிலும் இது காயத்திற்கான சிகிச்சை என்பது நமக்கு தெளிவாகிறது. மேலும் இது மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது."

ஆச்சர்யம் அளிக்கும் விதமாக சிகிச்சை பெற்ற ஐந்து நாட்களில் அந்த காயம் முற்றிலும் குணமாகி புண் மூடப்பட்டு இருந்தது. மேலும் இதில் குறிப்பிடப்படவேண்டிய முக்கிய அம்சம் அந்த காயம் ஒருபோதும் தொற்று அடையவில்லை.

லியானா பேஸ்ட்டைப் பயன்படுத்திய ஒராங்கின் கவனம் செலுத்திய முயற்சியானது அதன் .முழுமையான நோக்கம் என்ன என்பதை நமக்கு தெளிவுபடுத்தியுள்ளது. அந்த ஒராங்குட்டான் தனது காயம் ஆறுவதற்காக அது பாக்டீரிய தொற்றுக்கு ஆளாகிவிடக்கூடாது அதேவேளையில் காயமும் மாறவேண்டும்.அதை வெற்றியாக செய்து முடிந்துவிட்டது. ஒராங்குட்டானின் வெற்றி நமது விஞ்ஞானிகளுக்கும் கிடைத்த வெற்றி.

An Orangutan Treated His Wound with a Local Plant in Tamil

விலங்கியல் நிபுணர் மைக்கேல் ஹஃப்மேன் கூறும்போது

"விலங்குகள் காயமான பகுதிகளில் பயன்படுத்தும் விஷயங்களைப் பற்றி நிறைய [வெளியிடப்பட்ட அறிக்கைகள்] உள்ளன. அவர் ஜப்பானில் உள்ள நாகசாகி பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். அங்கு அவர் பல தசாப்தங்களாக ப்ரைமேட் சுய மருந்துகளைப் படித்துள்ளார். "ஆனால்,தற்போது ஒராங்குட்டான் மூலமாக கிடைத்துள்ள இது தாவரத்தின் இரசாயன பண்புகள் மற்றும் சிகிச்சையின் முன்னேற்றம் ஆகிய இரண்டின் விவரங்களுடன் வெளியிடப்பட்ட முதல் கட்டுரை என்று நான் நினைக்கிறேன்." கூறியுள்ளார்.

தனது குழுவின் கண்டுபிடிப்பு ஒராங்குட்டான்களைப் பாதுகாப்பதில் மக்களை அதிக அக்கறை கொள்ளச் செய்யும் என்று நம்புவதாக லாமர் கூறுகிறார். இந்தக் குரங்குகளை ஒரு முறை பார்த்தால், அவற்றின் பெயர் எப்படி வந்தது என்பது புரியும்.

An Orangutan Treated His Wound with a Local Plant in Tamil

"ஓராங்" என்றால் மலாய் மொழியில் நபர் அல்லது மனிதர் என்று பொருள் கொள்ளலாம். "ஹுடன்" என்றால் காடு. குரங்குகளின் மனித தோற்றம் அவற்றின் பிரகாசமான கண்கள், மீசை மற்றும் தாடியுடன் மனித தோற்றத்தை நினைவுப்படுத்தும். இதேபோல இன்னும் மூன்று வகை ஒராங்குட்டான்களும் அழியும் ஆபத்தான நிலையில் உள்ளன. "அவர்கள் இந்த உலகத்தை விட்டு மறைந்துவிட்டால் அது மிகவும் வருத்தமாக இருக்கும் என்பது மட்டுமல்ல. நமக்கு மருத்துவத்தின் புதிய பாதைகளையும் நாம் இழக்கவேண்டி இருக்கலாம்." என்று கூறுகிறார், அந்த பெண் விஞ்ஞானி.

அதனால் நாம் இப்பூமியின் அனைத்து உயிரினங்களையும் காத்து, அதன் இனங்கள் வாழ்வதற்கு வழிசெய்யவேண்டும். இந்த பூமியில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் வாழ்ந்தால் மட்டுமே உயிரின சமநிலை தக்கவைக்கப்படும்.

ஒரு விலங்கு முறையாக ஒரு தாவரத்துடன் சுய மருந்து செய்துக்கொள்ளும் முதல் அறிக்கை இதுவே ஆகும்.

Tags

Next Story