A robotics startup backed by OpenAI-ChatGpt செயற்கை நுண்ணறிவு மூலம் உருவான நிஜ மனித ரோபோக்கள்..! டெஸ்லாவை வீழ்த்திய ஸ்டார்ட்அப்..!

A robotics startup backed by OpenAI-ChatGpt செயற்கை நுண்ணறிவு மூலம் உருவான நிஜ மனித ரோபோக்கள்..! டெஸ்லாவை வீழ்த்திய ஸ்டார்ட்அப்..!
X
A robotics startup backed by OpenAI- OpenAI ஆதரவுடன் உருவாக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ரோபோக்கள் எலோன் மஸ்க்கின் டெஸ்லாவை முறியடித்து, AI -ன் நிஜ உலக ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

OpenAI -ன் உதவியுடன் ஒரு ரோபாட்டிக்ஸ் ஸ்டார்ட்அப், நிறுவனம் ChatGPT கொண்டு மனித உருவ ரோபோட் தயாரிப்பு பந்தயத்தில் எலோன் மஸ்க்கின் டெஸ்லாவை தோற்கடித்துள்ளனர். மேலும் மனித உருவ ரோபோக்களை பாதுகாப்புக் காவலர்களாக வெற்றிகரமாக நிறுத்தியுள்ளனர். அடுத்து, அவர்கள் ரோபோக்களை நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தும் நடைமுறை பயன்பாட்டுக்கு உதவும் ரோபோக்களாக பயன்படுத்த்த திட்டமிட்டுள்ளனர்.

A robotics startup backed by OpenAI


1X நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் கூற்றுப்படி, 'ChatGPTயை பயன்படுத்தி உருவாக்கிய OpenAI-ன் உதவியுடன் உருவாக்கப்படும் மனிதனைப் போன்ற தோற்றங்களைக்கொண்ட நிஜ கைகளின் செயல்பாட்டு வடிவில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த ரோபோக்களின் செயல்பாடுகளை பயன்படுத்தி நர்சிங் மற்றும் பார்டெண்டிங் பணிகளை திறம்படச் செய்யும் ரோபோ தற்போது அமெரிக்காவிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் செயல்பட்டு வருகிறது'என்று கூறியுள்ளார்.


ரோபாட்டிக்ஸ் நிறுவனமான 1X இன் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான பெர்ன்ட் போர்னிச் மேலும் கூறும்போது, " நாதா மனித உருவ ரோபோவான EVE, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் எங்களின் ஆரம்ப எதிர்பார்ப்புகளை விட திறமையாக செயல்படுகிறது. இந்த அற்புதமான மனித உருவம் மனித வரலாற்றில் ஒரு உண்மையான மனித உருவம் கொண்ட ரோபோவாக விளங்கி வெற்றிகரமாக ஒரு தொழில்முறை சூழலில் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் நிகழ்வாகும். இது எலோன் மஸ்க்கால் ஊக்குவிக்கப்பட்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லா ரோபோவை விஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.

A robotics startup backed by OpenAI


AI ஆல் இயக்கப்படும் நிஜ வாழ்க்கை ரோபோகாப் ரோபோ தற்போது, இரண்டு தொழில்துறை இடங்களில் பாதுகாப்புக் காவலர்களாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு தலை, ஒரு முகம் மற்றும் இரண்டு தன்னியக்கமாக நகரும் கைகளை வைத்திருப்பதன் மூலம் மற்ற பாதுகாப்பு ரோபோக்களில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்த ரோந்து செல்லும் EVE மனித உருவங்கள் மனித பாதுகாப்புக் காவலர்களால் கண்காணிக்கப்படுகின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!