டூவீலர் மோதியதில் ஓட்டி வந்தவர் பலி

டூவீலர்  மோதியதில் ஓட்டி வந்தவர் பலி
X
கெலமங்கலம் அருகே நடந்து சென்றவர் மீது டூவிலர் மோதியதில், டூவிலர் ஓட்டி வந்த விவசாயி பரிதாபமாக பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள துருகரபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் என்ற விவசாயி. இவர் கடந்த 15ம் தேதி தனது டூவிலரில் தேன்கனிக்கோட்டை & கெலமங்கலம் சாலையில் பிதிரெட்டி ஏரிக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே தேன்கனிக் கோட்டையை சேர்ந்த ராஜி என்பவர் நடத்து சென்று கொண்டிருந்துள்ளார். அவர் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முனிராஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர கிசிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். ராஜி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
அசைக்க முடியாத அடையாளம்..!திருச்செங்கோட்டில் 60-அடி திமுக கொடிக்கம்பம்..!