ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? முதல்வர் பழனிச்சாமி சவால்

ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?   முதல்வர் பழனிச்சாமி சவால்
X
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக வேட்பாளர் சிவா.ராஜமாணிக்கத்திற்கு வாக்கு சேகரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது என்னுடன் ஒரே மேடையில் ஸ்டாலின் விவாதிக்க தயாரா என்று சவால் விடுத்து பேசினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவா. ராஜமாணிக்கத்தை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது :

ஸ்டாலின் ஏது வேண்டுமானாலும் பேசுவர். இந்த தேர்தலுடன் அதிமுக காணாமல் போகிவிடும் என பேசிவருகிறார். அதிமுகவை ஒழிக்கவோ, அழிக்கவோ முடியாது.

அம்மா இறந்த பிறகு அதிமுகவை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என நினைத்தார்கள் கனவு பழிக்கவில்லை. அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி. திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. காவிரி டெல்டா மாவட்டம் பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவித்து விவசாயத்தை காத்த அரசு அதிமுகதான்.

மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தது திமுக. குளம் குட்டை ஆறுகளை தூர்வாரியது அம்மா அரசாங்கம். அம்மா அரசு கடந்த 20 நாட்களில் 20 திட்டங்கள் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், ஸ்டாலின் போற இடமெல்லாம் ஆட்சியை குறை சொல்லி வருகிறார்

ஸ்டாலின் செல்வ செழிப்புடன் இருந்தவர். உங்க அப்பா கலைஞர் உயிருடன் இருந்தவரை பதவி வழங்கவில்லை ஏன் என்றால், நம்பிக்கையில்லை. என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் தயாரா ? எடப்பாடி பழனிச்சாமியை யாருக்கும் தெரியாது என சொன்ன ஸ்டாலின் தற்போது என்னை விளம்பர படுத்திவருகிறார். அதற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி. உண்மை நேர்மை வெல்லும் நிச்சயமாக இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் . மீண்டும் அதிமுக ஆட்சி வந்த உடன் அம்மாவின் திட்டம் கோதாவரி & காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தபடும் இவ்வாறு அவர் பேசினார்.



Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!