எடப்பாடியின் தவறான முடிவுகளால் தொடர்ந்து தோல்வியடையும் அ.தி.மு.க..!
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி கட்சியையும் கைப்பற்றினார். அவரால் சிறந்த ஆட்சியைத் தர முடியவில்லை. அது மட்டுமே அவர் கட்சி மற்றும் ஆட்சிக்கு பொறுப்பேற்ற பிறகு ஒரு தேர்தலில் கூட அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை. கிட்டத்தட்ட ஒன்பது தேர்தல்கள் அதன் பின்னர் நடந்து விட்டன. அத்தனையிலும் அ.தி.மு.க., தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.
குறிப்பாக இந்த முறை நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் தி.மு.க.,விற்கு பல சாதகங்கள் இருந்தாலும், பாதகங்களும் சம அளவில் இருந்தன. இதனை புரிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் வலுவான கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்ததுடன், மிக கடும் உழைப்பினையும் கொடுத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, வலுவான கூட்டணி அமைப்பதில் பெரும் பின்னடைவினை சந்தித்தார். தன்னைச் சுற்றிலும் தவறான ஆலோசகர்களை வைத்துக் கொண்ட அவர், முரண்பாடுக்கு மேல் முரண்பாடான முடிவுகளை எடுத்தார்.
அதேபோல் தேர்தல் பணியிலும் அ.தி.மு.கவினர் எந்த சுறுசுறுப்பினையும் காட்டவில்லை. இதன் விளைவு இந்த தேர்தலிலும் படுதோல்வியை அ.தி.மு.க., சந்தித்துள்ளது. தவிர 10 தொகுதிகளில் 3ம் இடத்தையும், 3 தொகுதிகளில் நான்காம் இடத்தையும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் பெற்றது அக்கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு மிகப்பெரிய சோதனைகள் வர வாய்ப்புகள் உள்ளன என அக்கட்சியினர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக-பா.ஜ கூட்டணியை முடிவு செய்திருந்திருந்தால் இன்று முடிவுகள் கூட வேறுவிதமாக இருந்திருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu