படிக்கும் போதே வேலை: அசத்தும் இளைஞர்கள்
பைல் படம்.
குடிமகன்களை பற்றி வருத்தப்பட்டே நாம் பல நல்ல விஷயங்களை கவனிக்க தவறி விடுகிறோம். நம் உள்ளூர் இளைஞர்கள் பலர் கல்லுாரிகளில் படித்துக் கொண்டே வேலையும் செய்து சம்பாதிக்கின்றனர். குறிப்பாக பெட்ரோல் பங்க், மாலை நேர உணவகங்கள், பல்வேறு தொழிற்கூடங்களில் பணிபுரிகின்றனர். இவர்களுக்காக வேலை நேரம் தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே. (இந்த வேலை நேரத்தில் சிறிய மாறுதல் இருக்கலாம்).
குறிப்பாக தினமும் மாலையில் கல்லுாரி முடிந்த பின்னர், குறைந்தது ஐந்து மணி நேரம் ஏதாவது ஒரு வேலை பார்க்கின்றனர். அதுவும் வேலையை மிகவும் பொறுப்புடன், அக்கரையுடன் துல்லியமாக பார்க்கின்றனர். முதலாளிகளும் படிக்கும் மாணவர்கள் என்றால் வேலைக்கு சிவப்பு கம்பம் விரித்து வரவேற்கின்றனர். ஏனென்றால் இவர்களிடம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வேலை நேரத்திற்கு மிகவும் சரியாக வந்து விடுகின்றனர். நல்ல முறையிலும் வேலை செய்கின்றனர். இதனால் இந்த மாணவர்களுக்கு அட்வான்ஸ் சம்பளம் கொடுத்தாவது, அவர்களுக்கு தேவைப்படும் நேரம் எல்லாம் பணம் கொடுத்தாவது வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். குறிப்பாக தேனி, மதுரை, திண்டுக்கல், நெல்லை, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் எங்கும் இந்த நான்கு மணி நேர வேலைக் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu