நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் தொழிலாளி மர்ம மரணம்
சென்னையை அடுத்த பனையூரில் உள்ளது நடிகர் விஜய் ரசிகர் மன்ற தலைமை அலுவலகம். அங்கு கட்டிடத்தை புதுமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபாகரன் (வயது 34) என்பவர் கடந்த சில மாதங்களாக பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை சம்பளத்தை பெற்றுக்கொண்டு தன்னுடைய குடும்பத்தை பார்க்க சென்றுவிட்டு வந்த , பிரபாகரன் புதனன்று இரவு குடிபோதையில் மீண்டும் விஜய் அலுவலகத்திற்கு வந்துள்ளார். சக ஊழியர்களிடம் பசிப்பதாகச் சொல்லி பணம் கேட்ட அவர், சிறிது நேரத்திலும் கையிலும் வாயிலும் பரோட்டா வைத்திருந்தபடி உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற கானத்தூர் போலீசார், பிரபாகரன் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அளவுக்கு அதிகமான மது போதையில் பரோட்டா சாப்பிட்டதால் மூச்சு குழாயில் அடைப்பு ஏற்பட்டு பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu