விஜய் சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டம் வென்ற ஸ்ரீநிதா
விஜய் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 பட்டத்தை ஸ்ரீநிதா வென்றார்
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றி நடைபோட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான திறமையாளர்கள், சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த்திரையுலகிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும்,சிறு வயதினருக்குமாக நடைபெற்று வருகிறது. முன்னெப்போதும் விட இந்த முறை நடந்த சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசன் பாடகர்களுக்கான முன்கூட்டிய திரைப்பட வாய்ப்புகள், சர்ப்ரைஸ் தருணங்கள், பிரபலங்களின் வருகை, நெகிழ்வான சம்பவங்கள் என களைகட்டியது. பல அற்புத தருணங்கள் நிறைந்த இந்த சீசன் மக்களிடம் பெரும் ஆதரவைப்பெற்றது.
இந்த முறை நடந்த சீசனில் கலந்துகொண்ட திறமையாளர்கள் பலருக்கு நிகழ்ச்சி முடிவடையும் முன்னதாகவே திரைப்படத்தில் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி படத்தில் ஸ்ரீநிதா ஷிவாத்மிகா, ஹர்ஷினி, கோகுல் ஆகிய நால்வரும் இணைந்து ஒரு அட்டகாசமான பாடாலை பாடியுள்ளனர். நடுவராகக் கலந்துகொண்ட இசையமைப்பாளர் தமன் மற்றும் இசையமைப்பாளர் இமான் மூலமும் பல குழந்தைகளுக்கு பாடல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் எனும் பகுதி பலரின் மனதைத் தொட்டது. மிமிக்ரியில் கலக்கிய, எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஹர்ஷினி நேத்ரா, கானாவில் கலக்கிய கலர்வெடி கோகுல், தன் குரலால் கலக்கிய அக்ஷரா என பாடகர்கள் கலக்கிய தருணங்கள் இணையம் முழுக்க வைரலானது.
இரண்டாவது இடத்தை ஹர்ஷினி பெற்றார். மூன்றாமிடத்தை அக்சர லட்சுமி பெற்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu