தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்படுமா?

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்படுமா?
X

தீபாவளி- கோப்பு படம் 

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்க திட்டம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மறுநாள் நவம்பர் முதல் தேதி வெள்ளிக்கிழமை. நவம்பர் 2ம் தேதி சனிக்கிழமை, நவம்பர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இடையில் ஒரு நாள் மட்டும் வெள்ளிக்கிழமை அலுவலகம் வைத்தால், தீபாவளிக்கு வெளியூர் சென்று திரும்புபவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். அதேநேரம் தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை கொடுத்தால், தொடர்ந்து நான்கு நாள் விடுமுறை கிடைக்கும். இதன் மூலம் தீபாவளி பண்டிகை கொண்டாட நீண்ட துாரம் பயணிப்பவர்களுக்கு மிகுந்த வசதி ஏற்படும்.

எனவே தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளன. வழக்கம் போல் அரசு இந்த கோரிக்கைகளை பரிசீலிக்கத் தொடங்கி உள்ளது. இந்த கோரிக்கையில் நியாயமான காரணங்கள் இருப்பதால் விடுமுறை விடப்பட வேண்டும் என அரசை வலியுறுத்துவதாக பல்வேறு அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதே போலவே கடந்த ஆண்டு தீபாவளி ஞாயிறு அன்று வந்ததால், வெளியூர்களில் இருந்து மீண்டும் பணிக்குத் திரும்ப வசதியாக தமிழக அரசு திங்கட்கிழமையை விடுமுறையாக அறிவித்து 28ம் தேதி சனிக்கிழமையை வேலைநாளாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
நாமக்கல்லில் குடிபோதையில் அரசு பஸ்  ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைப்பு
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2047ம் ஆண்டில் இந்தியா உலகின் நெ.1 நாடாக திகழும்: மத்திய இணை அமைச்சர் முருகன் பேச்சு
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் பிரச்சினைகளை மன்றக் கூட்டத்தில் பேசக்கூடாது :    துணை மேயர் எச்சரிக்கையால் பரபரப்பு
குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயது    குழந்தைகளை சேர்த்து பயன்பெறலாம்
அம்மன் கோவில்களில்   சிறப்பு வழிபாடு
கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள்    ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
தமிழக அளவில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்ட  5 மாவட்டங்களில் நாமக்கல்லும் ஒன்று : கலெக்டர் பகீர் தகவல்
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
ai marketing future