பதுங்கும் ஓபிஎஸ் ;பாயும் ஈபிஎஸ்..! அதிமுகவில் நடப்பது என்ன..?
ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ்ஸிடம் இருந்து இரட்டை இலை சின்னம் வந்ததில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைகால் புரியாமல் மகிழ்ச்சியில் இருக்கிறார். இனிமே நான் சேலை கட்டாத ஜெயலலிதா, தொப்பி அணியாத எம்.ஜி.ஆரின் மறு அவதாரம் என்ற நிலைக்கு வந்துட்டார்.
இதனால் எவ்வளவு தான் பவர்புல்லாக இருந்தாலும் நான் நினைத்தால்தான் தன்னை யாரும் சந்திக்கமுடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில்தான் முன்னாள் அதிகாரி நட்ராஜ், எடப்பாடி பழனிசாமியை பார்க்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டு இருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏறெடுத்தும் பார்க்க மறுத்துட்டாதாக சொல்லப்படுகிறது. இதனால், நட்ராஜ் ரொம்பவே ஷாக் ஆகி இருக்கிறார். எடப்பாடி இப்படி நடந்துகொள்வதற்கு ஒரு பெரும் காரணம் கூறுகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டமன்றத்தில் ஓட்டுப்போட்ட 11 பேரில் இந்த போலீஸ் அதிகாரி நட்ராஜும் ஒருவர். அப்போதே ஓபிஎஸ் அணிக்கு மாறியவர். தற்போது அங்கிருந்து புறப்பட்டு எடப்பாடி அணியில் சேர்ந்திருக்கிறார். இனிமேல் தான் எங்களது தலைவர் யாரென்று தெரியும் என்று அவரது ஆதரவாளர்கள் குதூகலித்திருப்பதில் இருந்தே எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியிருப்பது தெரிகிறது. இந்த உயர்வின் ஆழமான எண்ணமே நட்ராஜை சந்திக்காமல் மறுத்து வருகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களே கூறி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, ஓபிஎஸ் டீமில் நடப்பதே வேறு. வேட்பாளர் திடீர் வாபஸால் அணியில் இருந்து வெளியேற நிர்வாகிகள் எடுக்கும் முடிவால் டென்ஷனில் இருக்கிறார் ஓபிஎஸ். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர் திடீர் வாபஸ் பெற்றுக்கொண்ட சம்பவம் டெல்டா மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ் அணியை சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகளுக்கு விருப்பம் இல்லாமல் போய்விட்டதாம். இடைத்தேர்தல் விவகாரத்தில் ஓபிஎஸ்ஸின் இந்த திடீர் முடிவால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கடும் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.
ஏற்கனவே, திருச்சி மாவட்டத்தில் சொல்லும்படி அளவுக்கு ஓபிஎஸ்ஸுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடையாது. இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் திடீர் வாபஸ் பெறப்பட்டதால், இருக்கும் கொஞ்ச நிர்வாகிகளுக்கு கூட ஓபிஎஸ் தலைமை மீது நம்பிக்கை இல்லாமல் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
எடப்பாடி அணி வேட்பாளர் பிரசாரத்திற்கோ அல்லது வாக்கு சேகரிப்புக்கோ ஓபிஎஸ் தரப்பில் இருந்து யாரும் செல்லக்கூடாது என நிர்வாகிகளுக்குள் முடிவெடுத்து இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu