வெள்ளத்தில் இழந்த சான்றிதழ்களின் நகல்களை பெற இணையதளம்
மிக்ஜம் புயல் மற்றும் வெள்ளத்தால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நகல்களைப் பெற தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் மிக்ஜம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் உள்ளாயின.
மழை, வெள்ள பாதிப்பினால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு ஏதுவாக www.mycertificates.in என்ற இணையதளம் உயர்கல்வி துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவ மாணவிகள் தங்களின் இழந்த சான்றிதழ் குறித்த விபரங்களை இந்த இணையதளத்தின் வாயிலாக இன்று முதல் பதிவு செய்யலாம். இந்த இணையதளத்தின் மூலம் சான்றிதழ்களின் விபரங்களை பதிவு செய்தபின் அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை சீட்டு அனுப்பப்படும்.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்டு, மாணவர்களுக்கு சென்னையில் வழங்கப்படும்.
மேலும், இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுபெற தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu