தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்
X
பைல் படம்.
தமிழக கடலோர மீனவர்களுக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் பகுதிகள்:

08.11.2021 முதல் 11.11.2021 வரை: தெற்கு ஆந்திர மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08.11.2021 - 09.11.2021: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

09.11.2021,10.11.2021 : தெற்கு வங்க கடல் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil