இந்திராகாந்திக்கு கடிதம் எழுதிய விவேக்

இந்திராகாந்திக்கு கடிதம் எழுதிய விவேக்
X
தனக்கும், இந்திரா காந்திக்கும் ஓரே நாள் பிறந்தநாள் என்பதால் வாழ்த்து கடிதம் எழுதினார் விவேக்.

நீலகிரி மாவட்டம் குன்னூருடன் தொடர்புடைய நடிகர் விவேக், இந்திரா காந்திக்கும் விவேக்கிற்கும் ஓரே நாள் பிறந்த தினம் என்று தனது தந்தை கூறியதை அடுத்து அப்போது தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் தனது தந்தை ஓப்புதலோடு பாரத பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.


கடந்த 1969 ஆம் ஆண்டு குன்னூர் ஓட்டுப்பட்டறையில் உள்ள சாந்தி விஜய் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது, தனக்கும் இந்திரா காந்திக்கும் ஓரே நாள் பிறந்தநாள் என்பதால் வாழ்த்து கடிதம் எழுதி, அதில் தனக்கும் உங்களுக்கும் ஓரேநாள் பிறந்த நாள் தங்களுக்கு வாழ்த்துக்கள் என்று எழுதி அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்திற்கு இந்திரா காந்தி தனது கைப்பட எழுதி பதில் அனுப்பியுள்ளார்.

Tags

Next Story
the future of ai in healthcare