விருதுநகரில் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

விருதுநகரில் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்
X
விருதுநகரில் காய்கறி கடையை இடமாற்ற செய்ய எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மெயின் பஜாரில் இயங்கிவரும் காய்கறி சந்தையை கொரோனா பரவல் காரணமாக இடமாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காய்கறி சந்தையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூடுவதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அச்சம் உள்ளதால் புதிய பேருந்து நிலையம், நகராட்சி திடல், உழவர் சந்தை ஆகிய மூன்று இடங்களில் இடமாற்றம் செய்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கறி வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காய்கறி சந்தையை இடமாற்றம் செய்தால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படும் எனக் கூறி இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இடமாற்றம் செய்வது குறித்து மீண்டும் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!