விருதுநகர் நகராட்சியில் வெற்றி வாகை சூடிய மாமியார், மருமகள்

விருதுநகர் நகராட்சியில் வெற்றி வாகை சூடிய மாமியார், மருமகள்
X

விருதுநகர் நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாமியார் பேபி, மருமகள் சித்தேஸ்வரி.

விருதுநகர் நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாமியாரும், மருமகளும் வெற்றி வாகை சூடினார்.

விருதுநகர் நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாமியாரும், மருமகளும் வெற்றி வாகை சூடினார்.

விருதுநகர் நகராட்சியில் 36 வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக 20 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும், காங்கிரஸ் 8 இடத்தையும், அதிமுக மற்றும் சுயேட்சைகள் தலா 3 இடங்களையும் பிடித்தனர்.

இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் 27வது வார்டில் போட்டியிட்ட பேபி என்பவரும், 26 வது வார்டில் போட்டியிட்ட அவரது மருமகள் சித்தேஸ்வரி வெற்றி வாகை சூடினர். பேபி 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அவரது மருமகள் சித்தேஸ்வரி முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். விருதுநகரில் மாமியார் மருமகள் வெற்றி பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா