செல்போன் திருட்டு வழக்கு- ஒருவருக்கு 2 ஆண்டு சிறை

செல்போன் திருட்டு வழக்கு- ஒருவருக்கு 2 ஆண்டு சிறை
X

விருதுநகரில் செல்போன் திருட்டு வழக்கில் தொடர்புடைய நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் உத்திரகுமார். இவர் செல்போன் திருட்டு வழக்கில் விருதுநகர் மேற்கு போலீசாரால் கடந்த 2014 ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விலை உயர்ந்த 11 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வழக்கு விசாரணை விருதுநகர் முதலாவது நீதித்துறை நடுவர் மருதுபாண்டி முன் நடந்தது.இதில் அரசு வழக்கறிஞர் கே.எஸ்.ராமசாமி ஆஜரானார். உத்திரகுமாருக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் தலா ஓராண்டு சிறை, தலா ரூ.1000 அபராதம், கட்டத் தவறினால் தலா ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நடுவர் உத்தரவிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!